துக்கு ஏற்றுமதியாகுஞ் சரக்குகள் ஆண்டொன்றிற்கு 55,000,000 செஸ்டேர்ஷிகள் (987,000 தங்கநாணயம்) பெறுமதியானவை என்று கணக்கிட்டிருக்கின்றார். இன்னும் அகஸ்துசீசர் முதல் சேனோ ஈறாகவுள்ள ஒவ்வொரு உரோம அரசரின் நாணயங்களும் தென்னிந்தியாவிற் பலவிடங்களிற் கண்டெடுக்கப்பட்டிருப்பதனால் உரோம நாட்டாருக்கும் தமிழ்நாட்டாருக்கும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டுவரையும் இடைவிடாத தொடர்பிருந்தமை ஒரு தலையாகும். அரேபியநாட்டுக் குதிரைகளும் தமிழ்நாட்டுத் துறைமுகங்களில் இறக்குமதியாயின. இக் குதிரை வியாபாரங் காரணமாகவும், பின்னர்க் கப்பல் மீகாமன் தொழில் காரணமாகவும், அரேபியர் தென்னிந்தியா இலங்கைக் கரையோரங்களில் சில பாகங்களைத் தங்குமிடமாக்கி நாளடைவில் அங்குக் குடிபதிகளாய் விட்டனர். |
பாபிலோனில் சுமேரிய அரசரின் தலைநகரமாகிய `ஊரின்ழு இடிபாடுகளில் மலையாளக் கரைகளில் மாத்திரம் வளருகின்ற தேக்கமரத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால் 5000 ஆண்டுகளுக்கு முன் சுமேரியர் தமிழகத்தோடு வியாபாரப் போக்குவரத்துடையவர்களாயிருந்தார்களெனப் புலனாகின்றது. |
கி.மு. 1462 இல் பதினெட்டாவது தலைமுறையாக முடிவெய்திய எகிப்திய அரசரின் "மம்மீஸ்" என்னும் பிரேதங்கள் இந்திய மசிலின் துணிகளால் மூடப்பட்டிருந்தன. எகிப்தியர் இந்தியாவில் கிடைக்கும் அவுரியிலிருந்து எடுக்கப்படும் நீலத்தினால் ஆடைகளுக்குச் சாய மூட்டினார்கள். இந்தியாவினின்றும் பிறநாடுகளுக்குச் சென்ற வியாபாரப் பொருட்களுள் பட்டு, மசிலின் முதலியன சிறந்தவை. |
தமிழர் சுமத்திரா, சாவா, மலாயா முதலிய நாடுகளோடும் வியாபாரம் நடத்திவந்தார்கள். இதற்குச் சான்று மணிமேகலையி லுள்ளது. |
அக்காலத்துக் காலினுங் கலத்தினும் வந்திறங்கய பண்டங்கள் வருமாறு, |