"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடன் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெளிய வீண்டி" | (பட்டினப்பாலை) | | வியாபாரிகள் தாம் கொடுக்கல் வாங்கல் செய்யும் பண்டப் பொதிகளில், அவற்றின் நிறை, அளவு, எண், இவற்றை எழுதிச் சாலைகளில் அடுக்கிவைத்துப் பின்பு எடுத்துச் செல்வர். இவ்வுண்மை, | "வம்பமாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்" | | என்னும் சிலப்பதிகார வடிகளால் விளங்கும். | வட இந்திய வியாபாரத்திலும் தென்னிந்திய வியாபாரம் முக்கிய முடையதெனக் கௌட்லியர் கருதினார்.1 தெற்கிலிருந்து மிக அரிய பண்டங்கள் கிடைத்தன. வடநாடு கம்பளி, தோல், குதிரை என்பவைகளை மாத்திரம் அளித்தது. பொன், வயிரம், முத்து மற்றை இரத்தினக் | | 1, "kautalya was of opinion that the commerce with the south was of great importance than that with the north because the more precious commodities come from the peninsula while the Northern Regions supplied only blankets, skins and horses Gold diamond pearls, other gems and conch shells are specified, as products of the south" (Oxford History of India, pp. 68, 69.) | Chanakya (Kautalya) the great minister of `Chandra-guptaழு Maurya was a native of Dravida, that is Kanchi.-(History of the Tamils, p.325). | | |
|
|