பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை23

வில்லை. மக்கட் படைப்பு இவ்வுலகில், பத்து அல்லது இருபது இலட்சம் வருடங்களுக்குமுன் தோன்றியிருக்கவேண்டுமெனச் சாத்திரிகள் கருதுகின்றனர். மனுவின் காலத்தில் ஒரு வெள்ளப்பெருக்கு உண்டானதென்றும், அவ்வெள்ளப் பெருக்குக்குப் பிழைத்திருந்த மனுவினின்றும் மக்கட் சந்ததி பெருகியதென்றும் புராணங்கள் நுவல்கின்றன.
சலப்பிரளயத்துக்குப் பின் மக்கட் சந்ததி இந்தியாவிலேயே பல்கியது என சர் வால்டர் ரலி என்னும் மேல்நாட்டறிஞர் கூறுகின்றனர்.1
மனு கிருதமாலை என்னும் ஆற்றங்கரையில் தவஞ் செய்து கொண்டிருந்த ஒரு முனிவர்2 என மச்சபுராணங் கூறுகின்றது. மனு சத்தியவிரதனென்னுமொரு தமிழ் வேந்தனெனப் பாகவத புராணம் புகலும். வையை நதிக்குக் கிருதமாலையென்னும் பெயர் ஆலாசிய மான்மியத்திற் காணப்படுகிறது.3
தமிழ்நாட்டுப் பழைய வேந்தர்களாகிய முசுகுந்தன் சிபி முதலானோர் மனுவழித் தோன்றியவர்களெனச் சொல்லப்படுகின்றனர்.
பழைய புராண வரலாறுகளிற் சொல்லப்படும் அரசர் முனிவர்களும் தென்னாட்டினராகவே எண்ணப்படுகின்றனர். காசிபர் பழைய இலங்கையை ஆண்ட சூரபன்மா

     1. According to Sir Walter Raleigh, India was the first planted and peopled country after the flood.

 --Dravidian India.

     2. "Manu is spoken of in Bhgavada-Purana as the Lord of Dravida.
     3. "In the XII Chapter of the Alasya Mahatmya portion of the Skandha purana where Suta-muni addressing Rishis says as follows:- `I have described to you the origini of the river Vaigai. This river is also named as Siva-Gangai, Vegavathi, Siva Gnanam Vilambiti and Kritamalai.ழு -- Tamilian Antiquary No.1.