"விவிலிய நூலின் கூற்றை நம்பி பலஸ்தீன் நாட்டிற்றான் மக்கட்படைப்பு முதற் றோன்றிய தென்பது சிலர் கருத்து. யெகோவாவால் ஒர் ஆண் மகனும் பின் அவன் என்பு கொண்டு ஒரு பெண்மகளும் திடீரென்று உண்டாக்கப்பட்டமை விவிலிய நூலிற் சொல்லப்படுகிறது. இத்தகைப் படைப்புவரலாறு உடல் வளர்ச்சிமுறை நன்கு ஆராய்ந்து நாட்டப்பட்ட இந்நாளில் அறிஞரால் ஒத்துக்கொள்ளப் படமாட்டாது. நடுகோட்டுப் பகுதியிலேயே முதல் உயிர்கள் தோன்றுவதற்கேற்ற வசதிகள் உண்டு என்பது ஆராய்ச்சியாளர் துணிபு." புரோடஜா (Protozoa) என்னும் (வருணமும் உருவமுமற்ற) நொய்ய நீர் வாழுயிர்களிலிருந்து கடற் பஞ்சைப் போன்ற (sponges) பிராணிகள் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து பவளக்கொடி யாக்கும் (Coral Builder) தோன்றுகின்றன. அவைகளிலிருந்து வெள்ளி மீன்களும் (Starfish) நத்தை நண்டு புழு பூச்சிகளும் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து பறவைகளும் வௌவால்களும், அவைகளிலிருந்து மிருகங்களும், அவைகளிலிருந்து வானரங்களும், அவைகளிலிருந்து வாலில்லாக் குரங்குகளும் தோன்றின. கடைசியில் மக்கள் தோன்றினர் என்றும் குரங்குக்கும் மனிதனுக்கு மிடையில் உள்ள ஒரு வகைப் பிராணி இருந்திருக்கவேண்டுமென்றும் கருதப்படுகின்றது. இதுவே தொல்லுயிர் நூலார் படைப்புக் கிரமங்களைக் குறித்துக் கூறும் முறையாகும். இச்சாத்திரிகள் கொள்கையோடு விவிலிய நூற் கூற்றுச் சிறிதும் ஒத்துப்போக |
| The hypothesis, that would represent what we know of their history most correctly, would place their original seat in the extreme south, somewhere probably not far from Madura or Tanjore and thence spreading fan-like towards the north. They have no traditions which point to any seat or race out of India, or of their having migrated from any country whose inhabitants they can claim any kindred so far as they know they are indigenous and aboriginal.--Dr. Fergusson quoted in Tamilian Antiquary No.1. | | |
|
|