பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை21

"ஆதிமாலமல நாபி கமலத்தய னுதித்
தயன் மரீசியெனு மண்ணலை யளித்த பரிசும்
காதல் கூர்தருமரீசி மகனாகி வளருங்
காசிபன் கதிரருக்கனை யளித்த பரிசும்
அவ்வருக்கன் மகனாகி மனுமே தினிபுரந்
தரிய காதலனை யாவினது கன்றுநிகரென்
றெவ்வருக்கமும் வியப்ப முறை செய்த பரிசும்
இக்கு வாகுவினன் மைந்தனென வந்த பரிசும்"
என்னும் கலிங்கத்துப் பரணி மக்கட் படைப்புத் தமிழகத்தில் உற்றதாகவே கூறுகின்றது. இங்குக் கூறப்பட்ட இராச பரம்பரையிலுள்ளோர் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர்.
"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி, பண்பிற் றலைப்பரித லின்று" என்னும் திருக்குறள் உரையில் பரிமேலழகர் "பழங்குடி தொன்றுதொட்டு வருகின்ற குடி; தொன்று தொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல்" என்று பொருள் கூறினர்.
தமிழர் தென்னிந்தியாவை வென்று குடியேறினார்களோ அல்லது பூர்வமே அங்கு வாழ்ந்து வருகின்றார்களோ என்று அறியக்கூடாத அவ்வளவு பழமைதொட்டு இந்தியாவில் உறைகின்றார்கள் என்றும், அவர்களுடைய உற்பத்தி மதுரை அல்லது தஞ்சாவூருக்குச் சமீபத்தில் இருக்கலாமென்றும், அவர்கள் பிறநாடுகளிலிருந்து இந்தியாவை அடைந்தார்களென்பதற்கு யாதும் வரலாறு காணப்படவில்லை யென்றும் டாக்டர் வெர்கூசன் என்பவர் கூறுவார்.1

     1. Their (`The Dravidiansழு) settlements in India extend to each prehistoric times that we cannot even feel sure that we regard them as immigrants or, at least, as either or colonists on al large scale, but rather as in the sense in which that term is usually un-