பக்கம் எண் :

20தமிழகம்

பூகண்டமா யிருந்தது. இந்தப் பூகண்டம் ஆதியில் மக்கள் முதலிற் றோன்றினா ரென்னுஞ் சிறப்புடையதாயிருக்கின்றது." (ஹெக்கல்)2 புதிய ஆராய்ச்சிகளால் மக்களினம் முதற்றோன்றியவிடம் இப்போது இந்து சமுத்திரத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலமெனத் தெரிகிறது. (மக்கணூல்)
"மக்கள் இனத்தைக் குறித்த ஆராய்ச்சியால் வடக்கேயுள்ள சாதிகளும் மத்தியதரைக் கடற்பக்கங்களிலுள்ள சாதிகளும் தென்னிந்தியாவினின்றும் சென்றனவென்று காணப்படுகின்றன. கிழக்குக் கரைகளில் மக்கள் என்பு முதலிய சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை இவ்வளவு காலத்துக்கு முற்பட்டனவென்று அறிந்து சொல்லமுடியாத பழமையுடையனவா யிருக்கின்றன. தென்னிந்தியாவிலிருந்த பெரிய சாதியார் தமது அறிவையும் உயர்ந்த குணங்களையும், தமது தோற்றம், வடிவம் (Physical qualities) முதலியனவற்றையும் உலகம் முழுவதிலும் பரப்பியவர்களாகக் காணப்படுகின்றனர்" என டாக்டர் மக்லீன் கூறியுள்ளார்!

     merged beneath the Indian Ocean -- Science of man Australia, Dec.1900."
     1. "Investigations in relation to trace show it is by no means impossible that Southern India was once the passage ground by which the ancient progenitors of northern and Mediterranean races proceeded to the parts of the globe which they now inhabit. Human remains and traces have been found on the east coast of an age, which is indeterminate but quite beyond the ordinary calculation of history. Antiquarian research is only now beginning to find means of supplementing the deficiency caused by the absence of materials constructed or collected by usual historical methods. These results are specially to be regarded without doubt, the people who have for many ages occupied this portion of the peninsula area people influencing the whole world not perhaps be moral and intellectual attributes to a great extent by superior physical qualities."

--Dr.E. Maclean.