பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை19

(Persians) சிந்துநதிப் பக்கங்களிலுள்ள நாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். இப் பெயர் கெரதோதஸ் (Herodotus) என்னும் சரிதாசிரியராலும் அலெக்சாந்தர் படையெழுச்சிக் காலத்திலிருந்த சரிதாசிரியர்களாலும் கிரேக்க தேசத்துக்குக் கொண்டுபோகப்பட்டது. இப்போது இந்தியா என்பது இமயமலைக்கும் கன்னியா குமரிக்கும் இடையிலுள்ள நாட்டைக் குறிக்கின்றது. இது பிறநாட்டார் பரத கண்டத்துக்குக் கொடுத்த பெயராகும்.

5. மக்கள் தோற்றம்

மக்கட்படைப்பு முதற்றோன்றிய இடம் இப்போது இந்து சமுத்திரத்துள் மூழ்கிக்கிடக்கும் கண்டமாகுமென ஐரோப்பிய பண்டிதர்கள் பலர் ஆராய்ந்து கூறுகின்றனர்.
1"இந்து சமுத்திரம் ஆசியாவின் கரையை ஒட்டிச் சந்தாத் தீவுகள் முதல் ஆப்பிரிக்காவின் கரைவரை நீண்ட ஒரு

       1. "The Indian Ocean formed a continent which extended from Sunda Islands along the coast of Asia to the east cost of Africa. This large continent is of great importance from being the possible cradle of the human race."
        " There are a number of circumstances (specially chronological facts) which suggest that the primeval home of man was a continent now sunk below the surface of the Indian Ocean which extended along the South of Asia, as it is at present (and probably in direct connection with it) towards the east as far as further India and the Sunda Islands, towards the west as far as the Madagascar and the south shores of Africa.
        "This large continent of former times Sclatter, an English man has called Lemuria from the monkey like animals which inhabited it and it is at the same time of great importance from being the probable cradle of the human race which in all likelihood here first developed out of anthropoid apes." --Prof. Ernest Haeckel.
        "The locality of the origin of the earliest race from recent researches appears to have been on lands now sub-