தாய்ச் சுழன்றுகொண்டிருக்கவேண்டும். அது காலை மேற்குறித்த வண்ணம் ஆஸ்திரேலியா வானத்தினின்றும் தவறிப் பூமியின்மேல் தாக்கியிருக்க வேண்டும். அதனால் மேற்குறித்த நில நீர் மாறுதல்கள் உண்டானதோடு, பூமியும் சாய்ந்து சுழலலாயிற்று.. இன்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் 26 டிக்கிரி சாய்வோடு சுழன்றது. அதற்கு முன்னர் இன்னும் அதிகச் சாய்வுற் றிருந்திருக்கவேண்டும். இப்போதுள்ள சாய்வு 23 டிக்கிரிகளுக்கு மேலில்லை. இவ்வாறு சென்றால் நாளடைவில் இச்சாய்வு அடியோடு மறைந்தொழியலாம். அந்நாளில் இருவகை அயனங்களும் பட்டொழியும்; பருவ வேறுபாடுகளும் சுருங்கிவிடும். உயிர்த்திரள்களின் வாழ்க்கை நிலையும் பெரிய மாறுதலடையும். இன்னும் தொடர்ந்து இது குறித்து நாமிப்போது எண்ணிப் பார்க்க வேண்டியதில்லை. இங்குக் குறிக்கத்தக்கதெல்லாம் ஆஸ்திரேலியா இப்புவியின்மீது வீழ்ந்து தாக்கிய ஒரு விண்மீனா மென்பதே. |
--திருவாளர் பா. வே. மாணிக்க நாயகரவர்கள் B.E.M.C.I.-செ. செல்வி. சிலம்பு 1. பரல் 3. |
முன் கடலாயிருந்த சகரா வனாந்தரத்திலிருந்த நீர் வற்றத் தொடங்கியதால் அது நிலனாக மாறியதே குமரி நாட்டின் அழிவுக்கு ஏது என்பது பிறிதொரு கொள்கை. |
"சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட காலத்துட்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்" என குமரியாற்றுக்கும் அதனை அடுத்த நிலத்தின் அழிவுக்கும் காரணங் கூறுவர் பேராசிரியர். சகரகுமாரர் தோண்டியதாற் கடலுண்டானதென இராமாயணங் கூறுகின்றது. இது ஒரு காலத்து நேர்ந்த எரிமலைக் குழப்பத்தைக் குறிப்பதாயிருக்கலாம். புராணகாரர் அதனைக் கற்பனைக் கதையால் புனைந்து கூறியிருத்தல் வேண்டும். |
4. இந்தியா |
இந்தியா என்பது சிந்து நதிக்கு இரு பக்கங்களிலுமுள்ள நாடுகள் என்று பொருள்படும். இது பாரசீகரால் |