பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை3

கையெழுத்துப் பிரதியில் இருப்பதை ஸ்காட் எலியட் என்பவர் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.1 அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:-
"ஆறாவது கான் ஆண்டில் 11ஆவது மலுக்கில் சாக் என்னும் திங்களில் அங்கு மிகவும் கடுமையான பூகம்பம் உண்டாய்ச் சூன்
திங்கள் 13ஆம்நாள் வரையும் நீடித்தது. இதன் விளைவாகச் சேற்றுமலைகளிலுள்ள நாடுகளும், மூவென்னும் தரையும் மறைந்தன. இப்பகுதிகளின் அடித்தளங்கள் எரிமலை அதிர்ச்சியினால் இடைவிடாது ஆட்டி அலைக்கப்பட்டு இருமுறை மேலே எழுந்து சடுதியில் இராக்காலத்தில்
மறைந்துபோயின. இக்குழப்பங்கள் இன்னும் நிலைத்தமையால் பல இடங்களில் பல முறைகளில் நிலங்கள் எழுந்தும் மறைந்தும் போயின. இறுதியில்
நிலம் வெடித்தமையால் பத்து நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டன. இந் நடுக்கத்தைப் பொறுக்க முடியாமையால் அந்நாடுகள் 64,000,000
மக்களுடன் இந்நூலெழுதுவதற்கு 8060 ஆண்டுகளின் முன் ஆழ்ந்துபோயின."
இவ்வுலகில் ஒன்பது கண்டங்களும் ஏழு கடல்களும் ஏழு தீவுகளும் உண்டெனப் புராணங்கள் அறைகின்றன. இஃது ஒருகாலத்து
இவ்வுலகம் அடைந்திருந்த வடிவினைக் குறிப்பதாயிருக்கலாம். தயிர்க்கடல் பாற்கடல் எனச்சொல்

     1. "In the year 6 Kan, on the 11th Maluc in the month Zac there occurred terrible earthquakes which continued without interruption untill the 13th Chuen. The country of the hills of mud, the land of Mu. was sacrificed; being twice upheaved it suddenly
disappeared during the night, the basin being continually shaken by volcanic forces. Being confined, these caused the land to sink
and to rise several times and in various places. At last the surface gave way and ten countries were torn asunder and
scattered. Unable to stand the force of the convulsions, they sank with their 64,000,000 of inhabitants 8060 years before the
writing of this book."