தச்ச னென்பார். அவர் வமிசத்தினர் இன்னும் அப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். இம்மொழியிலுள்ள விசேட காவியங்களும் பாடல்களும் இராமாயண பாரத பாகவத கதைகளைப் பற்றியவை. புராண காவியங்களை மிகுதியாகச் செய்தவர் துஞ்சத்த எழுத்தச்சன். கிளிப்பாட்டொன்றும், துள்ளல் என்றும் இருவகைப் பாட்டுக்கள் இம்மொழியில் வழங்குகின்றன. |
இவைகளெல்லாம் புராணக் கதைகள் சம்பந்தமானவை. கிளிப்பாட்டென்பது சாதாரணமாய் யாவரும் பாடவும், துள்ளல் என்பது சில சமயங்களில் குதித்துப் பாடவும் ஏற்பட்டவை. இப்பாட்டுக்களை விசேடமாகச் செய்தவர் குஞ்சு நம்பியார். சென்ற நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த அநந்தசயனம் ராமவர்மா மகாராசாவினால் சில நாடகங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இம்மொழியில் மணிப்பிரவாள சுலோகம் அதிகம். |
1மலையாளம் தென்னிந்தியாவிலே மேற்குக் கரையில் பேசப்படும் திராவிட இனமொழி. இது கி. பி. 9 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழினின்று பிரிந்து வழங்குகின்றதெனக் கருதப்படுகின்றது. இதில் பல இலக்கியங்களுண்டு. அவைகளில் சமக்கிருதச் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன. 1901 இல் மலையாளம் பேசும் மக்களின் எண் அறுபது இலட்சம். --கலைப்பேரகராதி. |
கொடுந் தமிழும் பிராகிருத சமக்கிருதமும் கலந்து கி. பி. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலையாளம் என்னும் பெயர் பெற்றது என்பர் `தமிழ் ஆராய்ச்சிழு (Tamil |
|
1. Malayalam, a language of Dravidian family spoken on the west coast of Southern India. It is believed to have developed out of Tamil as recently as the 9th century. It possesses a large literature in which words borrowed from Sanskrit are conspicuous. In 1901 the total number of speakers of Malayalam in all India was just about six millions. - Encyclopaedea Britanniea. |