பக்கம் எண் :

மொழி59

திரிலிங்கமென்பது சிவனின் மூன்று இலிங்கங்களைக் குறிக்கும். திரிலிங்கம் என்பது பழைய ஆந்திரநாட்டின் பெயர். அந்நாடு ஐரோப்பியரால் `சென்றூழு என வழங்கப்பட்டது. போர்த்துகேசியமொழியில் `சென்றூழு என்னும் பதம் மேன்மையுள்ள என்ற பொருளைத் தரும். தெலுங்கு பேசும் மக்கள் ஐதராபாத்து நைசாமின் ஆட்சிக்குக் கீழும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழும் காணப்படுவர். இவர்களின் நாடு சென்னைக்கு வடக்கில் ஆரம்பித்து பெல்லாரியின் வடமேற்கு வரையும் வடகிழக்கே ஒரிசாவுக்கு அண்மைவரையிலும் செல்கின்றது. பெல்லாரியில் வடமேற்கில் தெலுங்கு கன்னடத்தைச் சந்திக்கின்றது. தெலுங்கர் தமிழரிலும் உயரமுடையவர்களும் நிறத்தில் சிறிது வெளுத்தவர்களாகவும் காணப்படுகின்றனர். இவைகளையன்றி அவர்களிடத்தில் திராவிடக் குலத்துக்குரிய குணங் குறிகளெல்லாம் காணப்படுகின்றன. அவர்கள் முயற்சியுடையோர்; நல்ல பயிர்த் தொழிலாளர். திறமையுடைய கடலோடிகள். 1901 இல் எடுக்கப்பட்ட சனத்தொகைக் கணக்கின்படி தெலுங்கு பேசுவோர் இரண்டுகோடி பத்துலட்சம் மக்கள்--கலைப்பேரகராதி.

2. மலையாளம்

மலையாளம் சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு மொழி. அம்மொழிக்கு எழுத்துக் கற்பித்தவர் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த எழுத்

     lingus of Siva) a name for the old Kingdom of Andhra. It was at one time called by Europeans `Gentooழு from a Portuguese word meaning gentle. The Telugu-speaking people are partly subjects of Nizam of Hyderabad and partly under British rule beginning north of Madras city, extending north-west to Bellary where Telugu meets Kanarese and north-east to near Orissa. They are taller and fairer than Tamils, otherwise they are of typical Dravidian features. They are of an enterprising people, good farmers and skilful seamen........In 1901 the number of speakers in Telugu in India was nearly 21 milliions." - Encylopaedea Britannica.