வரும் தெலுங்கு இலக்கணங்களில் முந்தியது நன்னயப்பட்டரது. அவர் காலம் கி. பி. 12ஆவது நூற்றாண்டு. தெலுங்குப் பாரதமும் இவரையே நூலாசிரியராகக் கொண்டிருக்கின்றது. பதினான்காவது நூற்றாண்டுக்குப் பிற்பட்டுத்தான் இம்மொழியில் நூல்கள் பல்கின. ஏறக்குறைய இருநூறாண்டுகளுக்கு முன்னிருந்த வேமன்ன என்ற கவி அநேக நீதி நூல்கள் செய்திருக்கின்றார். தென்னாலிராமன் கதையும் இம்மொழியினின்றே மொழிபெயர்க்கப்பட்டது. |
ஆந்திரருடைய சந்ததிகள் வடநாடுகளை விட்டுத் தக்கண தேசத்தில் முதன் முதல் குடியேறிய இடத்திற்குத் திரிலிங்கமென்று பெயர். திரிலிங்கமென்றால் ஸ்ரீசைல பருவதம் (2) காளேசுவரம் (3) பீமேசுவரம் என்னும் மூன்றிடங்களில் சிவெபெருமான் மல்லிகார்ச்சுனன், காலநாதன், பீமேசுவரன் என்ற முப்பெயர்களால் மூன்று லிங்கங்களாக வமைந்து, அம்மூவிடங்களுக்கும் `திரிலிங்கானம்ழு என்று பிரபலமான பெயர் பெற்றுப் பிரகாசிக்கிறபடியால், அப்படிப் பிரகாசிக்கும் மூன்று நாட்டெல்லைகளுக்குள் வந்து குடியேறிய ஆந்திரர்களுக்குத் திரிலிங்கர் என்ற பெயரிட்டு அழைக்கப்பட்டுவர, அந்தத் திரிலிங்கர் என்னும் வார்த்தையானது நாளாவட்டத்தில் தெலுங்கரென்று மருவியதனால் அந்தத்தெலுங்கர் வழங்கிவந்த பாஷைக்கும் தெலுங்கு என்று பிரசித்தியாகிவிட்டது." தக்கண இந்தியா சரித்திரம், பக். 96. |
தெலுங்கு என்பது தெற்கு என்னும் சொல்லிலிருந்து தென்கு என்று வந்து, பின் தெனுகு தெலுங்கு எனத் திரிந்ததெனவும், திரிலிங்கமென்பது தெலுங்கு என்பதன் திரிபு என்றும், திரிலிங்க மென்பதிலிருந்து தெலுங்கு என்னுஞ் சொல் வந்ததெனக் கூறுதல் பிழையெனவும் `இந்துழுப் பத்திரிகையில் ஒருவர் எழுதியுள்ளார். |
1தெலுங்கு திராவிடமொழிகளுள் ஒன்று. இப்பெயர் திரிலிங்கம் என்னும் சொல்லினின்று பிறந்திருக்கலாம். |
1. "Telgu is one of the great Dravidian languages. The word is probably derived from Trilinga (the three- |