பக்கம் எண் :

மொழி57

பண்டிதர்கள் கருதுகின்றனர்1 என்று `தமிழ் ஆராய்ச்சிழு என்னும் நூலார் கூறுவர். "திசைச் சொல் பன்னாரென்பது வேறுமொழியில் ழகரம் இன்மையின் தமிழென்னும் பெயரைச் சொல்ல இயலாமைபற்றித் திராவிடம் முதலிய பெயர்களால் தமிழைக் குறிப்பது இதுபற்றிப் போலும்." (தமிழ் விடு தூது--மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாதையர் குறிப்பு.)
     தென்னாடு திருக்கோயில்களும் செல்வமும் மலிந்தவிட மாதலின், அது திருவிடமென்னும் பெயரைப் பெற்றதென்றும், பின் திருவிடம் திராவிடமாயிற்றென்றும் கூறுவர் `தமிழ் இந்தியாழு என்னும் நூலாசிரியர் திருவாளர் பூரணலிங்கம் பிள்ளை அவர்கள்.

2. தென்மொழி

இந்தியாவின் வடபாகத்தில் சமக்கிருதமும் தென்பாகத்தில் தமிழும் வழங்கின. வடக்கே வழங்கிய மொழி வடமொழி எனப்படவே தெற்கே வழங்கிய மொழிக்குத் தென்மொழி என்னும் பெயர் உண்டாயிற்று.
     அழகும் இனிமையும் உடைய மொழியாதலின், தமிழ் தென்மொழி என்னும் பெயர் பெற்றது என்பர் திராவிடப் பிரகாசிகைகாரர்.

2. தமிழின் வழிமொழிகள்

1. தெலுங்கு

     கண்ணுவர் என்ற முனிவர் இம்மொழிக்கு முதல் இலக்கண நூலாசிரியரென்று சொல்லப்படுவதுண்டு. இவரைப்பற்றி ஒன்றும் தெளிவாய் அறியக்கூடவில்லை. அவர் இலக்கணமும் மறைந்துபோயிற்று. இக்காலங்களில் வழங்கி

1. "Sanskrit Pandits however think Dravida as a corruption or sanscritised form of Tamil" - Tamil studies, P. 6.