பக்கம் எண் :

56தமிழகம்

உரையில் எழுதியிருக்கின்றனர். மயேச்சுரன் என்னும் ஆசிரியனைக் கடவுளாகக் கொண்டு பிற்காலத்தார் சிவபெருமான் வடமொழியைப் பாணினிக்கு அருளிச்செய்தார் எனக் கூறினர்போலும். தமிழிலே உள்ள இறையனா ரகப் பொருள் கடவுளால் அருளப்பட்டதென வழங்குகின்றது. அறிஞர்கள் அந்நூல்கள் சங்க காலத்திருந்த இறையனார் என்னும் புலவரால் செய்யப்பட்டதெனக் கருதுகின்றனர். ழுஇறையனார் அகப்பொருள் என்னும் நூலை இயற்றியவர் சிவபெருமான் கூறாகிய இறையனார் என்னும் புலவர் பெருமான் என மஹா மஹோபாத்தியாய உ. வே. சுவாமி நாதையரவர்கள் கூறுகின்றனர். முருகக் கடவுள் தமிழ் மொழியை அகத்திய முனிவருக்கு அறிவுறுத்தியதாக அருணந்தி சிவாசாரியர், அருணகிரிநாதர், சிவஞான முனிவர் முதலியோர் கூறியிருக்கின்றனர்.
பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட வீரசோழியத்தின் பாயிரத்தில்,
ழுஆயுங் குணத்தவ யோகிதன் பக்கல் அகத்தியன்கேட்
டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க
நீயுமுளையோ வெனிற்கருடன் சென்றநீள் விசும்பி
லீயும்பறக்கு மிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையேழு
என்று கூறப்பட்டிருக்கின்றது.

1. திராவிடம்

திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக வழங்குகின்றது. தமிழ் ழகரத்தை உச்சரிக்க வறியாத ஆரியர் தமிழ் என்னுஞ் சொல்லைத் திராவிடம் என வழங்கினர். ழுநகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந் தமிழுங் குருடரும் முடவரும் செல்லுஞ் செலவும்.....போல்வன்ழு என்னும் பேராசிரியர் உரை ஆரியர் திருத்தமுறத் தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது.
திராவிடமென்பது தமிழ் என்பதின் திரிபு, அல்லது சமக்கிருத வடிவமாக்கப்பட்ட சொல்ழு எனச் சமக்கிருத