காலத்தில் சிவபெருமான் தமிழ் மொழியை அகத்தியமுனிவருக்கு அருளிச்செய்தாரென இச்செய்யுள் கூறுகின்றது. பாணினி முனிவர் கி. மு. 4ஆம் நூற்றாண்டில் விளங்கியவர். அகத்தியர் இராமாயண காலத்திலும் அதற்கு முன்னும் இருந்தவர். ஆகவே, சிவபெருமான் பாணினிக்கு முன் வடமொழியை அருளிப், பின் அகத்தியருக்குத் தமிழை அறிவுறுத்தா ரென்பது ஏற்றதன்றாம். |
"விடையுகைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொழிக்குரைத் தாங்கியன் மலையமா முனிக்குத் திடமுறுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடமகட்கரங் கென்பது வழுதிநா டன்றோ" | |
என்பது திருவிளையாடற் புராணம். |
காஞ்சிப் புராணம் திருவிளையாடற் புராணம் என்னும் இரு நூல்கள் செய்த ஆசிரியருள் திருவிளையாடற் புராணம் இயற்றியவரே முன் விளங்கியவர். ஆகவே காஞ்சிப் புராணப் பாட்டு திருவிளையாடற் புராணத்தின் எதிரொலியாகவே காணப்படுகின்றது. |
"ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய மாதொருபாகன்" எனச் சேனாவரையர் கூறியிருக்கின்றனர். இவர் காலம் கி. பி. 12ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது. சேனாவரையர் சிவபெருமான் பாணினிக்கு இலக்கண முபதேசித்ததைக் குறித்துக் கூறவில்லை. |
பன்னிரு படலப் பாயிரமாகத் தொல்காப்பிய உரையிற் காட்டப்பட்ட பாடலிலாவது புறப்பொருள்வெண்பாப் பாயிரத்திலாவது சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழ் உரைத்த வரலாறு சொல்லப்படவில்லை. கி. பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டளவிற்றான் இவ்வகையான கதைகள் தோன்றியிருக்க வேண்டுமென எம். சீனிவாச ஐயங்கார் எம். ஏ. அவர்கள் கருதுகின்றனர். |
தமிழ்ப் பிரயோக விவேக நூலாசிரியர் `மயேச்சுரன் பாணினிக் காசிரியன்ழு என அந் நூலின் முதற் சூத்திர |