2. மொழி |
1. தமிழ் |
தமிழ் என்னுஞ் சொல் இனிமை என்னும் பண்புணர்த்தும். "தேனுறை தமிழ்", "தமிழ் தழீஇயசாயல்", "தமிழெனுமினிய தீஞ்சொற் றையல்" எனப் புலவர்கள் தமிழ் என்னுஞ் சொல்லை1 இனிமை என்னும் பொருளில் ஆண்டிருக்கின்றனர். |
"இனிமையு நீர்மையுந் தமிழென லாகும்" |
என்னும் பிங்கலச் சூத்திரமும் தமிழுக்கு இனிமை என்பது பொருளெனக் கூறுகின்றது. தமிழ் என்னும் சொல் பிறமொழி வழியாக வந்ததெனச் சில சரித்திராசிரியர்கள் கூறியிருக்கின்றனர். தொல்காப்பியம் முதலிய பழைய செந்தமிழ் நூல்களில் தமிழ் என்னுஞ் சொல் காணப்படுகின்றமையின் அன்னோர் உரைகள் ஏற்றுக்கொள்ளற் பாலனவல்ல. தமிழர் தமது மொழிக்குரிய பெயரைத்தம் மொழியால் வழங்காது பிறமொழிச் சொல்லால் வழங்கினார்கள் என்பது பொது அறிவுக்கு ஏற்றதன்று. |
தமிழும் சமக்கிருதமும் சகோதர மொழிகளென்றும் அவற்றைச் சிவபெருமான் முறையே அகத்தியருக்கும் பாணினிக்கும் அருளிச்செய்தனர் என்றும் காஞ்சிப் புராணம் திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. |
"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் சொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார்" | |
என்பது காஞ்சிப் புராணச் செய்யுள். முற்காலத்தில் வடமொழியைப் பாணினிக்கு அருளிச் செய்ததுபோலப் பிற் |
|
1. தமிழினொழுகு நறுஞ்சுவையே (மீ. பி. தமிழ்) |