பக்கம் எண் :

மொழி81

துக்கள் கிடையா. "மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி" என்னுந் தொல்காப்பியச் சூத்திரம் இதனை வலியுறுத்தும். எல்லா எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வாரா. எல்லா எழுத்துக்களும் மொழிக்கிடையில் மயங்கா. முன் எத்தனை எழுத்துக்க ளிருந்தனவோ அத்தனையே இன்றுவரையு முள்ளன.
     ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு தமிழர் முறையைப் பார்த்துச் செய்யப்பட்ட தென்பது ஆராய்ச்சியாளர் துணிபு. "தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய லிபிகள் ஏற்படுத்திக்கொள்ளும் இயல்புடைய ஆரியர் தமிழ் நாட்டிற் கேற்றபடி தமிழ்லிபியை ஒட்டிக் `கிரந்தம்; என்னும் புதியதோர் லிபி வகுத்தனர்." (தமிழ் மொழியின் வரலாறு)
     தமிழ் மொழியிலுள்ள முதலெழுத்துக்கள் முப்பதுமே குறைபாடில்லாத உறுப்புக்கள் அமைந்த மக்கள், குறைபாடில்லாத முயற்சியால் வாயாற் பிறப்பிக்கும் ஓசைகளாகும். சமக்கிருத மொழிகட்காணப்படும் தமிழிலில்லாத சில எழுத்துக்கள் குறைபாடுடைய முயற்சியாற் பிறப்பிக்கப்படும் எழுத்துக்களாம். தமிழுக்குரிய ஆய்த எழுத்தின் உதவியைக்கொண்டு எம்மொழியிலுள்ள எவ்வகை எழுத்தோசைகளையும் பிறப்பித்தல் எளிதில் அமையும்.
     இம்முறையினை விளக்கிக் காட்டினோர் ஆசிரியர் மறைமலையடிகள், திருவாளர் பா. வே. மாணிக்க நாயகர் முதலியோராவர்.
     "அகர முதல் ஒளகார இறுவாயாகக் கிடந்த பன்னீரெழுத்துக்களுமே உயிரெழுத்துக்கள் எனப்படுவதற்கும், இவை தமிழ் மொழியின் ஒன்றாக அடைவுபடுத்து நிறுத்தப்பட்ட முறையே முறையெனப்படுதற்கும் உரிமை யுடையனவாம். இஃது இவ்வாறாகவும், வடநூலார் தமிழின் நெடுங்கணக்கைப் பார்த்து உயிரெழுத்து மெய்யெழுத்துக்களை அடைவுபடுத்திக்கொண்ட அளவில் அமையாது,