பக்கம் எண் :

82தமிழகம்

தமிழினும் தமக்கு உயிரெழுத்துக்கள் மிகுதியாய் உண்டென்று காட்டுவதற்குப் புகுந்து பொருந்தாப் பேரவாவால் உயிரெழுத்துக்களல்லாத ரு ரூ லூ, அம் அ: என்னும் உயிரெழுத்துக்களையும் அவற்றோடு கலந்து இழுக்கினார். இவ்வாறு எழுத்துக்களிற் கலந்த குற்றியலுகர ஊகாரங்களையும் அகரங்களையும் நீக்கினால் எஞ்சி நிற்பன ம் ர் ல் ஃ என்னும் மெய்யெழுத்துக்களும் ஆய்தமுமேயாகலின் அவர் உயிரெழுத்துக் களைப் பன்னிரண்டின் மேலாகப் படைத்திட்டுக் கொண்டது வெறும் போலியா மென்க."
     "பதினெட்டு மெய்யெழுத்துக்கள் மட்டுமே செவ்வையாகப் பொருந்தப்பட்ட உறுப்புகளுடைய மக்கள் குறைபாடில்லாத முயற்சியால் தம் வாயாற் பிறப்பிப்பன வாகும். விந்துவினின்றும் மேலெழுந்த விந்து காரண வொலியைத் தன்னிலையில் நேரே இயங்கவிடாது மக்கள் தமது நிறைந்த முயற்சியால் தலை மிடறு நெஞ்சு என்னும் மூவிடங்களிலும் அதனை நிறுத்திப் பல், நா. மூக்கு, அண்ணம் என்னும் ஐந்துறுப்புகளோடு அதனைப் பல்வேறுபடத் திரித்துப் பல ஒலிகளாக வெளியிடுகின்றனர். இவ்விந்து காரணவொலி குறைபாடில்லாத உறுப்புகளாலும் குறைபாடில்லாத முயற்சிகளாலும் இயக்கக் கூடும்வரை இப்பதினெட்டெழுத்தின் மேற்பட்ட ஒலிகள் தோன்றுதற்குச் சிறிதுமிடமே யில்லை. மற்று இவ்வாறன்றிக் குறைபாடுடைய உறுப்புக்களும் குறைபாடுடைய முயற்சிகளுமிருந்தால் விந்துகாரண வொலி செவ்வனே இயங்கப்படாமற் பலவாறாய் இயங்கி அளவுக் கடங்காப் பலதிற வொலிகளை யெல்லாம் தோற்றுவிக்கும்.
     "தமிழில் இல்லாமல் வடமொழி நெடுங்கணக்கில் மட்டும் காணப்படும் சில ஒற்றெழுத்துக்கள் அத்துணையும் தமிழின்கண் நிறைந்த முயற்சியாற் பிறப்பிக்கும் ஒற்றெழுத்துக்கள் சிலவற்றைக் குறைந்த முயற்சியால் ஆய்த வொலியைத் தடைப்படாது செல்லவிடுத்துப் பிறப்பிக்கத் தோற்றுவனவே யாகுமாதலால், உண்மையாக நோக்குங்கால் அவை தனித்தனி மெய்யெழுத்துக்கள் ஆகமாட்டா