வென்பது தெற்றெனப் புலப்படும்." தமிழில் ஒலி எழுத்துக்கள்--ஆசிரியர் மறைமலையடிகள். |
ஆரியமொழியிற் காணப்படும் எழுத்துக்களும் பிறவும் அம்மொழிக்கினமாகிய இலத்தின், கிரீக், எபிரேயம் முதலிய மொழிகளில் இல்லாமையால் இந்தியாவை அடைந்த ஆரியர் அங்குறைந்த தொல்குடிகளாகிய தமிழரின் எழுத்து முறைகளைப் பின்பற்றியதுடன் லிபிகளையும் ஆக்கிக்கொண்டார்களென்பது.....வெள்ளிடை விலங்கல். |
1"பேராசிரியர் இராப்சன், தென்னிந்திய மொழிகள் மிகவும் திருத்தம் பெற்றிருந்தன வென்றும், ஆகவே சமக்கிருதத்தில் திராவிடக் கலப்பிருத்தல் ஆச்சரியப்படத்தக்கதன்று என்றும் குறிப்பிட்டுள்ளார். இலத்தின் கிரேக்கு முதலிய ஏனைய ஆரிய மொழிகளிற் காணப்படாது சமக்கிருதத்தில் மாத்திரம் காணப்படும் சிறப்புக்கள் ஆரிய மக்கள் திராவிட மக்களோடு தொடர்பு பெற்றமையால் உண்டாயின வென்று இலகுவில் கொள்ளலாகும்." (திராவிட இந்தியா, பக். 75,) |
"தமிழ்ச் சொற்களும் வடசொற்கள் போலத் தாதுக்களை யுடையனவாம். தாதுவெனினும் பகுதி யெனினும் ஒன்றே. தமிழ்ச்சொற் பகுதிகள் எல்லாச் சொற்களுக்கும் தெற்றெனக் காண்ப தரிது. அதுபற்றியே தொல்காப்பியரும் `மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றாழு என்றார். ஆயினும் நுண்ணியதாக ஆராயுமிடத்துப் புலப்படாமற் போகாது. சில சொற்கள் வினையடியாகவும் சில சொற்கள் உரியடியாகவும் சில சொற்கள் இடையடியாகவும் ஒரு சில பெயரடியாகவும் பிறந்தன. |
|
1. Prof. Rapson bears testimony to the fact that the aboriginal languages in the South of India were associated with a high degree of Culture, and hence it is not surprising to note the presence of the Dravidian element in Sanskrit. It can be easily maintained that much, that is not found in Latin and Greek, but peculiar to Sanskrit alone is due to the contact of the Aryans with the Dravidians. - Dravidian India. p. 75. |