பக்கம் எண் :

84தமிழகம்

     "அகத்தியர் காலத்திலே வழங்கிய சொற்கள் பல பிற்காலத்திலே வழக்கிறந்தன. அவர் காலத்திலே வழங்காத சொற்கள் பிற்காலத்தில் வழங்குவனவாயின. அவர் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் சகர அகரத்தை முதலாகவுடைய தமிழ்ச் சொற்கள் வழங்கவில்லை. சட்டி, சட்டுவம் சட்டை சந்திரன் சஞ்சலம் சல்லி சலி முதலியன தமிழ்ச்சொற்களல்ல." (தென்மொழி வரலாறு)
     "பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொற்களில் இடைச்சொற்களும உரிச் சொற்களும் முன்னொரு காலத்தில் வினைகளாயிருந்தன. அவைகளனைத்தும் காலக்கிரமத்தில் அத்தன்மை யிழந்து இப்போதுள்ள இடையுரிப் பண்புகள் அடைவனவாயின." (தமிழ்மொழியின் வரலாறு)
     தமிழ்மொழியின் முதற் பருவத்தே உள்ள சொற்கள் பெரும்பாலும் ஓரசையின வென்றும், அங்ஙனம் தமிழுக்குள்ள சொற்கள் பெருந்தொகையின வல்லவென்றும், ஒவ்வோர் சொல்லடியாகவும் பற்பல சொற்கள் தோன்றிப் பல்கினவென்றும் சொல் ஆராய்ச்சிவல்ல ஞானப்பிரகாசரவர்கள் தமது `தமிழ் மொழி அமைப்புற்ற வரலாறுழு என்னும் நூலில் விளக்கிக் காட்டியுள்ளார்.
"கதந பமவெனு மாவைந் தெழுத்தும்
எல்லா வுயிரொடுஞ் செல்லு மார்முதலே"
"சகரக் கிளவியு மவற்றோ ரற்றே
அ ஐ ஒள வெனு மூன்றலங் கடையே"
     என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் அக்காலத்துச் ச, சௌ முதல் மொழிகள் வழங்கவில்லையெனத் தெரிகிறது. "சகரக்கிளவி" என்னும் சூத்திரத்தி னிரண்டாமடி, "அவை ஒள வெனு மொன்றலங் கடையே" என்றிருக்கவேண்டும் என்றும், அது எவ்வாறோ "அ ஐ ஒளவெனு மூன்றலங்கடையே" என்று திருத்தப்பட்டதென்றும் திருவாளர் அடைக்கலம் பிள்ளை அவர்கள் மெய்கண்டான் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். இது ஆராய்ச்சிக்