பக்கம் எண் :

மொழி85

குரியது. அகராதிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சகர முதன் மொழிகள் காணப்படுகின்றன.
"யாழ்ப்பாணத்திலே எழுதத்தொடங்கிச் சென்னையில் பூர்த்தியாக்கப்பட்ட வின்ஸ்லோ (Winslow) அகராதி மிகச் சிறந்ததாகும். இது அறுபத்தேழு வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டது. அவ்வகராதியில் 67,000 சொற்கள் காணப்படுகின்றன. 1913 ஆம் ஆண்டில் புதிய தமிழ்ப் பேரகராதி மதுரையில் தொடங்கப்பட்டது. அது இப்போது சென்னையில் பல்கலைக் கழகத்தாரின் மேற்பார்வையில் இயற்றப்பட்டு வருகின்றது. சென்னை அரசாங்கத்தார் இம்முயற்சிக்கு ஒரு லட்சம் ரூபா உதவியிருக்கின்றனர். இப்புதிய பேரகராதிக்கு வேண்டிய விஷயங்கள் அகராதிகளிலும் வேறு பலவகைகளிலும் சேகரிக்கப்படுகின்றன. வின்ஸ்லோவால் யாழ்ப்பாண வழக்கில் மாத்திரம் உள்ளனவென்று காட்டப்பட்ட 3000 சொற்கள் குமாரசுவாமிப் பிள்ளை, முத்துத்தம்பிப் பிள்ளை `ஜாவனா கல்லூரிழு (Jaffna College) புரொபஸர் ஹட்சன் முதலானவர்கள் அடங்கிய ஒரு சபைக்கு ஆராய்ச்சிக்கு விடப்பட்டன. அவற்றுள் நூற்றுக்கு 97 சொற்கள் இன்றும் யாழ்ப்பாணர் வழக்கில் உள்ளனவென்று ஒப்புக்கொண்டனர். புதிய பேரகராதி (Lexicon) யில் 83,000 அல்லது 84,000 சொற்கள் வரையில்தான் இருத்தல் கூடும்.

6. வழக்கு

     `தமிழ் மொழிழு வழக்கு1 எனவும் செய்யுள் எனவும் இரு கூறுபட்டு இயங்குகின்றது. சாத்தா வா, நீ பொருளைத் தேடினாய், அவன் மிகப் பசித்தான், யான் சோறு கொடுத்தேன் என்றாற்போல் யாவரும் வழங்கும் சொற்றொடர்கள் வழக்கு எனப்படும். இழிந்தோர் பலவாறு
     1. வழக்கெனினும் உரை யெனினும், நடை யெனினும் ஒக்கும். தமிழ் மொழியார் உரை மாத்திரையே உலகில் வழக்கென்பர். (திராவிடப் பிரகாசிகை)
     2. Dr. J. S. Sandler, M. A.