பக்கம் எண் :

86தமிழகம்

சிதைவுபடக் கூறுவனவும் ஒருவாற்றால் வழக்கேயாயினும் அவை அறிவுடையோரால் மேற்கொள்ளப்படாவாகும்.

7. செய்யுள்

     "நல்லறிவுடையாரால் பலவகைச் சொற்களாலும் அமைதி பெறச் செய்யப்படுவன செய்யுள் எனப்படும். பாட்டுக்களே யன்றிச் சூத்திரம் உரை முதலாயினவும் செய்யுள் என்னும் பெயரால் சூத்திரச் செய்யுள் என்று இங்ஙனம் பண்டு வழங்கின. யாம் இப்பொழுது செய்யுள் என்னும் பெயரைப் பாட்டுக்கே உரித்தாக்கிச் சூத்திரம் அல்லாதவைகளை உரையெனவும், பாட்டு எனவும் இருவகைப்படுத்திக் கொள்கின்றோம். உரையினையும் பல்வகைப்படுத்திக் கூறுகின்றார் தொல்காப்பியனார். செய்யுட்களின் இடையே விரவிவரும் உரை சிலப்பதிகாரத்திற் காணப்படுவது. செய்யுள் அல்லது சூத்திரப் பொருளைத் தெளிவுறுத்தும் உரைகள் தமிழில் மிக்குள்ளன. யாதானுமொரு வரலாறு அல்லது உண்மையினைச் செய்யுளின்றித் தொடர்ச்சியாகக் கூறும் உரைநடையா னியன்ற நூல், `உரைநூல்ழு என்று வழங்கற் குரியது. அத்தகைய நூல் பண்டைச் சான்றோர் செய்ததாக நமக்கு ஒன்றுங் கிடைத்திலது. உரைநடையானது பயில்வாரது அறிவு நுணுகி நின்று ஆராய்தற் கேற்ற திட்பமும் கூறும் பொருளுக்கேற்ற ஓசையும் உடையதன்று. ஆதலின் பாட்டுக்கள் போல, உணர்வினை எழுப்பி இன்பஞ் செய்வதாகாது. ஓர் வரையறையின்மையின் சிதைவின்றி நிலைபெறுவதுமாகாது. எனினும் எளிதிற் பொருள் விளங்குவதாய்ச் சுருங்கிய அறிவினர்க்குப் பயன்றருவது உரைநடையே யாகலின், ஒவ்வொரு மொழிக்கும் உரைநூல்கள் இன்றியமையாதன வென்பதிற் றடையில்லை. அவ்வகையில் தமிழ்மொழி வளர்ச்சியுறாதிருந்தது இரங்கத்தக்க தொன்றே."

     "தமிழ் மொழியிலுள்ள பாட்டுக்களின் மாட்சி அளவிடற்பாலன வல்ல. பிறமொழிச் செய்யுளை யெல்லாம் தமிழ்ச் செய்யுட்கள் வென்றுவிட்டன என்னலாம். நம்