"மெய்ப்பாலைப் பெண்டன்மை யெய்தியபின் மெல்லியலை யொப்ப வுணர்ந்த பொழுதுண்ட - லொப்பார்க்கு நெய்தயங்கு தீமுன்னர் நேரிழையை யீவதோ தெய்வப்பே ராகுந் தெரிந்து" | | என்றாராகலின். | யாழோர் கூட்டம் (கந்தருவம்) ஆவது: "ஒத்த குலனும், குணனும், அழகும், அறிவும், பருவமும் உடையார், யாருமில் ஒரு சிறைக்கண் அன்பு மீதூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். என்னை? | `ஒத்த குலத்தார் தமியரா யோரிடத்துத் தத்தமிற் கண்டதம் மன்பினா--லுய்த்திட வந்தர மின்றிப் புணர்வ ததுவரோ கந்தருவ மென்ற கருத்துழு | | எனவும், | "முற்செய் வினையது முறையா வுண்மையி னொத்த விருவரு முள்ளக நெகிழ்ந்து காட்சி யையந் தெரிதல் தேற்றலென நான்கிறந் தவட்கு நாணு மடனும் அச்சமும் பயிர்ப்பு மவற்கு முயிர்த்தகத் தடக்கிய, அறிவு நிறைவு மோர்ப்புந் தேற்றமும் மறையவர்க்கு மாண்டதோ ரிடத்தின் மெய்யுறு வகையும் முள்ளல்ல துடம்புறப்படாத் தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய களவெனப் படுவது கந்தருவ மணமே" | | என்றார் அவிநயனார். | அரும் பொருள் வினை (அசுரம்) ஆவது: "இன்னது செய்தார்க்கு இவளுரியள் என்ற இடத்து, அன்னது செய்தெய்துவது. அவை வில்லேற்றுதல், திரிபன்றி யெய்தல் கொல்லேறு கோடல் முதலிய." | | |
|
|