பக்கம் எண் :

மொழி95

     இராக்கதம் ஆவது: "ஆடைமே லிடுதல், பூமே லிடுதல், கதவடைத்தல் முதலியவற்றால் வலிதிற் கோடல்.
     பேய்நிலை யாவது: "துஞ்சினாரோடும், மயங்கினாரோடும், சரித்தாரோடும், செத்தாரோடும், விலங்கினோடும், இழிதகு மரபில் யாருமில்லா வொருசிறைக்கண் புணர்ந்து ஒழுகு ஒழுக்கம்."
     தொல்காப்பியர் தென்னாட்டு வழக்குகள் சிலவற்றை வடநாட்டு வழக்குகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். தொல்காப்பியர் குறிப்பிட்ட யாழோர் `கந்தருவர்ழு என்னும் ஒரு கூட்டத்தின ராவர். இவர்கள் இமயமலை அடிவாரங்களில் வாழும் அழகிய தோற்றமுடைய மக்கள் என்றும், இவர்களுள் ஆடவரும் மகளிரும் ஒழுக்கத்தால் சிறிது தளர்ந்தவர்கள் என்றும் வைத்தியா என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். தொல்காப்பியர் தமிழர்களின் களவு ஒழுக்கம் கந்தருவர் வழக்கத்தை ஒருபுடை ஒக்குமென உணர்த்தினார். தொல்காப்பியத்தில் வரும் அந்தணர், மறை என்னும் சொற்கள், சில விடங்களில் ஆரியப் பிராமணரையும் அவர் வேதங்களையும் சுட்டுகின்றன. வீரமாமுனிவர் கிறித்துவ வேதத்தையும், கிறித்துவ குருமாரையும் குறிக்க வேதம், வேதியர் என்னும் சொற்களை ஆண்டுள்ளார். தொல்காப்பியத்தில் வரும் மறை, மறையோர், அந்தணர் என்னும் சொற்களுக்கு இடமறிந்து பொருள் கொள்ளுதல் வேண்டும்.

4. அகம்

     "அகமென்பது, தலைவனுந் தலைவியும் தம்முளொத்த அன்பினராய்க் கூடுங் கூட்டத்தின்கண் பிறந்த இன்பம் அக்கூட்டத்தின்கண் ஆண்டனுபவித்த அக்காலத்தில் இன்பம் எவ்வாறிருந்ததென் றவ்விருவரி லொருவரை யொருவர் கேட்கின், தமக்குப் புலப்படாதாய் உள்ளத்துணர்வே நுகர்வதாய் அகத்தே நிகழ்தலின், அகமெனப் பெயராயிற்று. அகமெனினும் காமப் பகுதி யெனினும் ஒக்