கும்." அகத்தைச் சார்ந்துவரும் பொருளெல்லாம் அகப்பொருளாம். | 5. களவு | "உருவுந் திருவுங் குலமும் முதலியவற்றால் ஒப்புயர்வற்று விளங்குந் தலைமகனொருவன் வேட்டையாடிக் கொண்டு மலைச்சாரல் ஒன்றன் பக்கத்தே தனியனாய் வந்தானாக, ஆங்குத் தினைப்புனங்காத்துத் தோழியரோடு விளையாடுபவளும் உரு திரு முதலியவற்றால் ஒப்புயர்வற்றவளுமாகிய மலைவாணர் மகளொருத்தி விளையாட்டு விருப்பாற் றோழியர் தனித் தனி பிரிந்த நிலையில் தானுந் தனியளாய் அத்தலைவன் முன்பு எதிர்ப்பட்டனள். எதிர்ப்பட்ட இருவரும் ஊழ் வயத்தால் உள்ளங் கவர்ந்து அவ்விடத்தே மகிழ்ந்து பின்னர் ஒருவர்க்கொருவர் பிரிவாற்றாது ஒருவாறு ஆற்றுவித்துக்கொண்டு தம்மிடம் நோக்கிச் சென்றனர். இவ்வாறு விதியாற் கூட்டப்பட்டுப் பிரிந்த தலைமகன் தான் காதலுற்ற தலைவியைத் திரும்பக் காணுமவாவினால் தூண்டப்பட்டு, முன்னாட் கூடிய இடத்தை நாடிச் செல்ல, அங்ஙனமே அன்பு தூண்ட ஆங்கு வந்த தலைவியைத் தலைமகன் எதிர்ப்பட்டுக் கண்டு மகிழ்ந்து காதலால் முன்போலக் கலந்தான். இம்முறை மூன்றாம் முறை கூடும்போது தன் பாங்கனால் தலைவி யிருப்பிடமறிந்து சென்று அவளைச் சேர்வன். இனித் தோழியால் எப்பொழுதுஞ் சூழப்பட்டுள்ள தலைவியை இங்ஙனமே பலகாலுந் தனியிடத் தெதிர்ப்பட்டுக் கூடுதல் அருமையாயிருத்தல்பற்றித் தலைவியைத் தடையின்றி அனுபவிக்கக் கருதியவனாய் அதற்குத் தக்க துணையாவாள் அவள் காதற்றோழியே என்பதை யறிந்துகொண்டு அவள்பாற் சென்று குறிப்பாகவும் வெளிப்படையாகவும் தன் குறை கூறி வேண்ட, அவள் பலபடியாக ஆராய்ந்து இருவருக்குங் கூட்டமுண்மை யுணர்ந்து, இனி நாமும் இதற்கு உடன்படலே நலம் என்று அவ்விருவரையுங் கூட்டுவதற்கு முயல்வள். இங்ஙனம் தோழியால் பல முறை கூடிவருமிடையில் தலைவியால் காக்கப்பட்டுவருந் தினைப்புனம் முற்றிக் கதிர் | | |
|
|