ஆஸ்திரேலிய மக்களுக்கும் இந்தியாவிற் காணப்படும் சில மக்கட் கூட்டத்தினருக்கும் இனமுடையவர்களாகக் காணப்படுகின்றனர் 1 செங்கோன்றரைச் செலவு என்னும் நூலில் கடல் கொண்ட நாட்டின் சில மலை, ஆற்று இடப் பெயர்கள் காணப்படுகின்றன. இறையனாரகப் பொருளுரை தலைச்சங்கமிருந்த மதுரையைக் கடல் கொண்டதெனக் கூறுகின்றது. இளங்கோவடிகள் பஃறுளியாறு, குமரியாறு முதலியவைகளைக் கடல் கொண்டதெனக் குறிப்பிட்டுள்ளார். அடியார்க்கு நல்லார் குமரிமுனைக்குத் தெற்கே கிடந்து கடல் கொள்ளப்பட்ட நாற்பத்தொன்பது நாடுகளைக் குறிப்பிட்டதோடு அந்நிலப் பரப்பு 700 காவத 2 முடையதெனவுங் கூறியுள்ளார். இவைகள் எல்லாம் ஒரு காலத்தில் இந்தியக் குடாநாட்டின் அமைப்பு வேறு வகையில் இருந்ததென்பதை நன்கு விளக்குவன. கடல் கோள் இவ்வுலக மக்கள் எல்லோரும் ஒரு பெரிய கடல் கோளைப்பற்றிக் கூறுகின்றனர். ஒவ்வொரு மக்கட் கூட்டத்தினரும் அது தத்தம் நாட்டில் நிகழ்ந்ததென்பர். இக்கதை சிறிய சிறிய வேறுபாடுகளுடன் ஒரே வகையாக எல்லோராலும் கூறப்படுகின்றது. ஆகவே உலக மக்கள் மத்திய இடமொன்றிலிருந்து பிரிந்து செல்வதன் முன் இக் கடல்கோள் நிகழ்ந்ததெனக் கருதப்படுகின்றது. 3 1. The formation of Malaidives P 23,-J. S. Gardmer. 2. காவதம் 10 கல் தூரம். 3. When the ancestors of Indians. the Pereans, the Greeks, the Romans, the Slaves, the Celts and the Germans were living together within the same onclosures. Nay under the same roof, Lectures on the science of language.--1864-Maxmuller. |