காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான், அமெரிக்கா வரையில் சூரியத்தம்ப வழிபாடு (சிவலிங்கவழிபாடு) காணப்பட்டது. இவ்விடங்களிலெல்லாம் சர்ப்பமும் இடபமும் பரிசுத்த முடையனவாகக் கருதப்பட்டன. இவ்விரண்டு பெரிய ஏதுக்களால் உலகமக்கள் ஒரு பெருங் கூட்டத்தினின்றும் பிரிந்து ஆங்காங்கு வாழ்ந்தார்கள் என்பது தெள்ளிதிற் புலனாகின்றது. இதற்காதாரமாக மேல்நாட்டு வரலாற்றாசிரியர்கள் ஆராய்ந்து கூறியுள்ளன சிலவற்றை ஈண்டுத் தருகின்றோம். "செம்புக் காலத்தில் கிழக்கே மத்தியதரை முதல் சீனா வரையில் ஒரேவகை நாகரிகம் நிலவியதென விக்ரர் கிறித்தியன் என்பவர் கூறியுள்ளார். 1 "நீலாறு, தைகிரஸ், சிந்து, கங்கை, இந்து ஆசியா, ஒசேனியா முதலிய இடங்களின் தோணிகள் மறந்து போகப்பட்ட மக்களின் நாகரிக இணைப்பை வெளியிடுகின்றன0. 2 " (இவை ஒரேவகை அமைப்புடையன.) "அமெரிக்கரின் முன்னோர் ஆரியமக்களுக்கு முந்தியவர்களான துரானிய வகுப்பாரின் மொழியை வழங்கி யோரா யிருத்தல் வேண்டும். அத் துரானியருள் முக்கியம் வாய்ந்தோர் திராவிடர் எனப் பிரிக்கப்பட்டுள்ள மக்களாவர்." "அமெரிக்க சாதிகளின் பழையமொழி ஒட்டுச்சொற்களை உடையது. சொற்களில் வேறுபட்டிருந்தபோதும் இலக்கண அமைவில் அஃது இந்தியமொழிகளை ஒத்திருக்கின்றது. பழைய சொற்கள் மறைந்து போகப் புதிய சொற்கள் புகுந்திருக்கலாம். ஆனால் மொழி அமைப்பு 1. India and the Pacific world P. 63.; Victor Christian. 2. Ibid P. 63. |