ஏறினார். மீன் தோணியை இமயமலைக்குக் கொண்டு போயிற்று. அத்தோணி ஒரு மரத்திற் கட்டப்பட்டது. பின்பு அம்மீன் இருடிகளை நோக்கி, "யானே பிரமா; யான் மீன் வடிவெடுத்து உங்கள் எல்லோரையும் காத்தேன்," எனக் கூறிற்று. பாகவத புராணத்தில் இவ்விடம் தென்னிந்தியா வென்று கூறப்பட்டுள்ளது. அதில் மனு அல்லது சத்திய விரதன் திராவிட வேந்தன் எனக் கூறப்படுகின்றான். அங்கு மனு மலைய மலையில் ஊற்றெடுத்து வருகின்ற கிருதமாலையில் (வையையில்) பலி செலுத்தும்போது மீன் அவருடைய கையில் வருகின்றது. புராணங்கள் பழைய ஞாபகங்களை ஒரளவிற் கூறியுள்ளன. இவ் வரலாற்றுள் சில உண்மைகள் இருக்கின்றன என்பது மறுத்தற்கில்லை. புாராணங்கள் பிற்காலங்களில் கூட்டியும் திருத்தியும் குறைத்தும் எழுதப்பட்டுள்ளன. 1 உலகமக்களின் ஓர் உற்பத்திக்குரிய அடையாளங்கள் கி. மு. 4000 வரையில் உலகமக்களை எல்லாம் ஒரு கூட்டத்தில் இணைப்பதற்குரிய ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதற்குரிய இரண்டு ஆதாரங்கள் மொழியும், வழி பாடுமாகும். கி. மு. 4000 வரையில் கிழக்குத் தீவுகள் சீனா அமெரிக்கா சுமேரியா பபிலோன் கிரேத்தா சைபிரஸ் முதலிய தேசங்களில் வழங்கிய எழுத்துக்கள் ஒரே உற்பத்தியைச் சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர் காட்டியிருக்கின்றனர். பிரித்தன் தேசம் முதல் யப்பான், 1. In the 4th century (A. D.) Buddhism declined and there was a Brahmanical revival; and the Brahmans re-edited some of the books on the religious and the civil laws and gave a new and popular shape to them. The old puranas were also recasted about the period and a good many new ones written-collected works of R. G. Bhandarkar Vol. 11, P. 444. |