பக்கம் எண் :

தமிழ் இந்தியா133

அம்மை அப்பர் வழிபாடு


இவ்வாறு அம்மை அப்பர் வழிபாடுகள் ஆதியிற் றனித் தனியே தோன்றின. பின்பு மக்கள் இவர்களை மனைவி கணவன் என்னும் முறையின ராகக்கொண்டு வழிபடலாயினர். கித்தைதி நாட்டில் நாணயத்திற் காணப்பட்ட வடிவங்களும் இதனையே குறிப்பிடுகின்றன. மேற்கு ஆசிய நாடுகளில் அம்மை அப்பர் வழிபாடு இன்னொரு வகையிலும் ஆரம்பித்தது. ஞாயிற்றுத், திங்கள் வழிபாடுகள் அவர்களிடையே தோன்றிய காலத்தில் அவர்கள் திங்களைத் தாய்க்கடவுளாகவும் ஞாயிற்றைத் தந்தைக் கடவுளாகவும் கொண்டு வழிபட்டனர். ஆகவே, பழைய அம்மை அப்பர் வழிபாடுகள் மேற்கு ஆசிய நாடுகளில் ஞாயிற்றுத், திங்கள் வழிபாடுகளுள் நுழைந்துள்ளன.


ஞாயிற்று வழிபாடு

இதன்மேல் இவ்வுலகில் இருளைப்போக்கி ஒளியைக் கொடுக்கும் ஞாயிறே முழுமுதற் கடவுள் என்ற மக்கள் உணர ஆரம்பித்தனர். அவர்கள் சிவந்தவன் அல்லது சிவந்த ஒளியுடையவன் என்னும் பொருளில் ஞாயிற்றுக்குச் சிவன் என்னும் பெயர் கொடுத்து வழிபடுவாராயினர். இப்பெயரே ஆதியில் ஞாயிற்றுக்குப் பெயராக வழங்கிற்று என்பதைச் சிவன் என்னும் தலைப்பின்கீழ் விளக்குதும். சிவன் என்பதற்கு அடுத்தபடியில் எல் என்னும் பெயர் கதிரவனின் பெயராக வழங்கிற்று. மேற்கு ஆசியாவில் எல்லின் திரிபாகிய பெயர்களே ஞாயிற்றைக் குறிக்கப் பெரிதும் வழங்கின. உலகமக்கள் எல்லோரும் கடவுளின் பெயராக ஆண்ட பெயர்களை ஆராயுமிடத்து அவை ஒளி அல்லது ஒளியுடையவன்