கின்றது.1 இதே வடிவினதாகக் கல்லாற் செதுக்கப்பட்ட சிலைகளையும் அந்நாட்டு மக்கள் வழிபட்டார்கள். சிவனுக் குரியவனவாகச் சொல்லப்படும் என்பு, ஊமத்தை மாலை, சங்கவெண்குழை, புலித்தோலுடை முதலியவைகளால் மக்கள், தோலை உடையாகவும், என்பு இப்பி முதலியவைகளை அணிகளாகவும்கொண்ட ஒரு காலத்தில் இவ்வழிபாடு தோன்றிற்று என்று நன்கு சிந்தித்தறியலாகும். முற் காலத்தில் இந்திய மக்களுக்கு வாகனமாகப் பயன்பட்டன எருதுகளே. இன்றும் ஆலயங்களில் எருதுகளின்மீது வாத்தியக்காரர் ஏறியிருந்து பேரிகை கொட்டிச் செல்வதை நாம் பார்க்கலாம். ஆகவே, அக்காலத் தந்தைக்கடவுளுக்கு இ டபம் சிறந்த ஊர்தி ஆக்கப்பட்டது. கித்தைகி, சீரியா, கிரேத்தா, சுமேரியா முதலிய நாடுகளின்2 நாணயங்களில் இமில் உள்ள இந்திய இடபம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே இடபத்தை ஊர்தியாகவுடைய தந்தை வழிபாடு இந்திய நாட்டிலேயே ஆரம்பித்திருத்தல் வேண்டும். 1. There is on the left hand of the image of the bull God and on the right that of the mother goddess both deities are enshrined representing the mated pair of the established Hittitee devinities. But that which arrests the attention and may throw light upon the broader question of the Hittitee origins is the obvious parallelism of Siva............This God is sented on the bull throne and the Goddess wearing the mural crown sits on a lion throne with staff and mace forming a pair - The Hittitee Empire - John Garstang pp. 204, 304. It (Jupiter Delichenus) seems more the less to represent the chief deity of the place. He stands on a bull holding the emblem of lightning and a double axe. His consort was a lion Goddess described on inscriptions as Hera Saneta - Ibid p. 307. 2. The humped Indian bull (Bos Indicus) all of which are freely figured in Sumerian, Hitto, Phoenecian and Kassi seals as sacred animal of the East - The Indo - Sumerian seals deciphered - p. 20, L. A. Waddell. |