"The lioness or panther on which she sits (the great Asiatic mother Goddess) remind us of the--lion drawn car of Cybele who was worshipped in the neighbouring land of Phrygia across the Halys. So Adargate the great Syrian Goddess of Herapolis Bambyce, was portrayed sitting on a lioness.....At Babylon image of a Goddess whom the Greeks called Rheu had the figures of two lions standing on her knees. On Egyptian monuments the Semitic God Kadesh represented standing on a lion--Golden Bough. Among the Babylonian and northern Semites she was called Istar (ஈசுவரி) the Astoreth of Bible and Astorate of Phoenicia--The Hittite Empire, P. 204. அப்பர் வழிபாடு தாய்க்கடவுள் வழிபாடு இவ்வாறு தோன்றி நடைபெற்று வரும்போது திருமணக் கட்டுப்பாடு இறுக்கமடைந்தது; தந்தை ஆட்சி உண்டாயிற்று. தந்தையே எல்லா அதிகாரமும் உடையவனானான். ஆகவே, தந்தை வழிபாடு உண்டாயிற்று. ஒளவைப்பிராட்டியார், "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என அருளிச்செய்திருக்கின்றமையும் அம்மை அப்பர் வழிபாட்டை ஓரளவு விளக்குவதாகும். தந்தை-வழிபாடு, காலத்தில் வேந்தன் வழிபாடாக மாறிற்று. தாய்க்கடவுளின் ஒப்பப் பழைய மக்கள் வழிபட்ட தந்தை வடிவம் இன்றைய சிவன் வடிவமே எனத் தெரிகின்றது. கித்தைதி நாட்டிலே காணப்பட்ட பழைய நாணத்தில் தாய்க்கடவுளுக்கு வலப் பக்கத்தே, முத்தலைவேலும் கண்டகோடரியும் கையிற்றாங்கிய அப்பர் வடிவம் ஒன்று இடபத்தின்மீது நிற் |