பக்கம் எண் :

130தமிழ் இந்தியா

இரண்டாம் கட்பஇரண்டாம் கட்பிஸ் என்னும் கிரேக்க இந்திய அரசனின் (கி. பி. 50) தங்க நாணயம்

இடப்பட்டன. என்று பழந்தமிழ் நூல்களால் அறிகின்றேம். காளி பாலைநிலத் தெய்வம். பாலைநில மக்கள், வேடர், இடையர், உழவர் என்னும் மக்களின் வாழ்க்கைப்படிகளில் ஆரம்பப்படியிலுள்ளோர். ஆகவே, தாய்க்கடவுள் வழிபாடு, மக்கள் பயிரிடாதும், மிருகங்களைப் பிடித்துப்பழக்கி வளர்க்க அறியாதும் இருந்த ஒரு காலத்தில் ஆரம்பித்ததாகும். தாய்க்கடவுள் வழிபாட்டின் போது பாம்பு வழிபாடு ஆரம்பிக்கவில்லைபோலும்.


 

கித்தைதியற் காணப்பட்ட அம்மை அப்பர்க் கடவுளர் பொறித்த நாணயம்

நாணயத்தில் இடபத்தின் மீது இருக்கும் அப்பரும், அருகில் சிங்க வாகனத்தின் மீதிருக்கும் அம்மையும் காணப்படுகின்றனர். சிரியா, பபிலோன், எகிப்திய நாடுகளிலும் சிங்க வாகனமுடைய தாய்க் கடவுளே மேலான தெய்வமாக வழிபடப்பட்டார்.