பக்கம் எண் :

தமிழ் இந்தியா129

கூற்றை வலியுறுத்துகின்றது. சின்ன ஆசியாவிலே கித்தைதி என்னும் நாடு

 



மொகஞ்சொதரோவிற் கண்டு பிடிக்கப்பட்ட சிவலிங்கம்


ஒன்று உள்ளது. இம்மக்களின் வழிபாடு நாகரிகம் முதலியன தமிழ் மக்களுடையன போன்றன. இங்குக் காணப்பட்ட பழைய நாணயமொன்றில் ஒரு கையிற் றண்டும் மற்றக் கையிற் கேடகமும் பிடித்துச் சிங்கத்தின் மீது வீற்றிருக்கும் தாய்க் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பண்டைய தாய்க்கடவுளின் வடிவம் இரண்டு கைகளுடையதாகவே இருந்ததெனத் துணியப்படும். பெண் சிங்கத்தின் மீதிருக்கும் குடைஷ் என்னும் தாய்க்கடவுளே எகிப்தியரது போர்த் தெய்வமாகும்.

  தாய்க்கடவுள் மேற்கு ஆசிய மக்களால் அஸ்ரெறெத் ஹெரா, றியா முதலிய பல பெயர்களால் வழிபடப்பட்டது மக்கள் மிகத் தாழ்நிலை அடைந்திருந்த காலத்தே தாய்க் கடவுள் வழிபாடு ஆரம்பித்ததென்பது அதன் வழிபாட்டு முறைகளால் நன்கு அறிதும். தமிழ் மக்கள் காடுகிழாள், கொற்றவை, விந்தை, காளி முதலிய பெயரால் தாய்க் கடவுளை வழிபட்டனர். தாய்க் கடவுளுக்கு நரபலியும், எருமை ஆடு முதலிய பிற பலிகளும்
த. இ.-II--9