பக்கம் எண் :

128தமிழ் இந்தியா

உச்சிமேல் வைத்துப் புகழப்படும் உயிர்நூற் புலவர். இவர் ஆதிகால மக்களுக்கு வளர்ந்த கடைவாய்ப்பற்கள் இருந்தனவென்றும், அவை பச்சை இறைச்சியைக்கிழிப்பதற்குப் பயன்பட்டன. வென்றும், அவைகளின் பயன் குறைந்தகாலத்தில் அவை வளர்ச்சிக் குன்றி வேட்டைப் பல் (Canine teeth) அளவில் இருக்கின்றவென்றும் கூறியுள்ளார்.1 ஆகவே, தாய்க்கடவுள் வழிபாடு மக்களுக்குக் கடைவாய்ப் பற்கள் வளர்ச்சியடைந்திருந்த ஒரு காலத்தில் ஆரம்பித்ததெனக் கொள்ளலாம்.

   தாய்க்கடவுளின் வாகனம் சிங்கம். அவள் கையிலிருக்கும் ஆயுதங்கள் தண்டும் கேடகமும். கடவுளருக்கு நான்கு கைகளும் பல கைகளும் கொடுக்கும் வழக்கம் கிறித்தவ ஆண்டுக்குப் பின்னையது என 2 மாக்டனல் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து காட்டியுள்ளார். அவர் கூறவது:

  "இந்துக் கடவுளரின் வடிவங்களை அமைக்கும் முறையில் கிறிஸ்தவ ஆண்டின் ஆரம்பத்தில் சில மாற்றங்கள் உண்டாயின. அதற்குமுன் இக்கடவுட்சிலைகள் மனிதனைப் போல இரண்டு கைகளுடையனவாயிருந்தன. இவ்வகை வடிவங்களே புத்தசிற்பங்களிற் காணப்பட்டன. இரண்டாம் கற்பீஸ் (Kadphis ii; 50. A. D.) என்னும் கிரேக்க இந்திய அரசனின் நாணயத்தில் சிவன் இரண்டு கைகளுடையவராகவே காணப்படுகிறார்." மொகாஞ்சொ - தரோவிற் காணப்பட்ட சிவன்வடிவுக்கு இரண்டு கைகள் இருப்பதும் மேற்படி


  1. ஆண் விலங்குகளுக்கும், மக்களுள் ஆண்பாலினருக்கும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் உறுப்புகளின் அடையாளங்கள் காணப்படுகின்றன. பெண் இனங்கள் அதிக குட்டிகளை ஈனுகின்ற காலத்தில் ஆண் இனங்களும் குட்டிகளுக்குப் பால்கொடுத்தனவென்றும், அக்காலத்தில் அவ்வுறுப்புக்கள் வளர்ச்சியடைந்திருந்தனவென்றும், அவற்றின் பயன்பாடு குறைந்த பிற்காலத்தில் அவை வளர்ச்சி குன்றி அடையாளமளவில் இருக்கின்றவென்றும் அவர் கூறுவர்.

  2
. Indias past - A. A. Macdonell - P. P. 84-5.