பக்கம் எண் :

தமிழ் இந்தியா127

உரிமையும் இல்லை.1 இவ்வழக்குகளெல்லாம் பெண் ஆட்சி உண்டாயிருந்த காலத்தின் எதிரொலிகளே. சகோதரியின் மகன் மகளை மணம் முடித்தலினாலேயே பெண்ணின் தந்தையின் சொத்து மருமகனைச் சீதனமாக அடைகிறவெனத் தேயிலர் என்னும் மனிதவரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தாயம் என்பது பெண் ஆட்சி உண்டாயிருந்த காலத்துத் தோன்றிய சொல். இது, சொத்துத் தாயிடமிருந்து பிள்ளைகளை அடைந்தது என்பதை நன்கு விளக்குவது. தாயாட்சி உண்டாயிருந்த காலத்தில் பிள்ளைகள் தாயைச் சூழ்ந்திருந்தார்கள். தாயிடத்தில் எல்லா அதிகாரமும் இருந்தன. எல்லா அதிகாரமுடைய தாய் தெய்வமாக வணங்கப்பட்டாள். தாயிற் சிறந்தொரு கோயிலில்லை அல்லவா? இவ் வழிபாடு மக்கள் வாழ்க்கைப்பருவத்தின் மிக முற் காலத்திலேயே தோன்றியிருந்தது. இன்று தாய்க்கடவுளின் சிலைகள், வளர்ந்த கடைவாய்ப் பற்களுடையனவாகக் காணப்படுகின்றன. தென்னிந்திய மக்களின் நாகரிகம் படைப்புக்காலம் முதல் படிப்படியே வளர்ந்துவந்துள்ளதென்பது முன்னமே காட்டப்பட்டுள்ளது.

  இத் தாய்க்கடவுளின் வடிவமும் ஆதிகாலத்தில் மக்கள் கொண்டு வழிபட்ட வடிவைப் பின்பற்றியே வெட்டப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றதெனக்கொள்ளுதல் தவறாகாது. தார்வின்
(Darwin) என்பார் எல்லாராலும்


1. The Ammachi is not a member of the Royal household and is associated with the royal court. She has neither official nor social position at court, and cannot even be seen in public with the ruler whose wife she is. Her issues occupy the same position as herself and the law of Malabar exclude them from all Claims to public recognition....... The nieces, who like nephews have the title of Highness and Rani......... Native life in Travancore - Rev. Samuel Mateer.