பக்கம் எண் :

126தமிழ் இந்தியா

பெண்பாலினரே. உலகில் ஆதியின்றோன்றியது பெண் ஆட்சி. அக்காலத்தில் மணத் தொடர்புகள் இறுக்கம் அடையவில்லை. தாய் பெறும் குழந்தைகள் குடும்பத்துக்குச் சொந்தமானவை; தந்தைக்கு அவைகளிடம் உரிமை உண்டாகவில்லை.1 இன்றும் இவ் வழக்குத் திருந்தாத மக்களிடையும் திருந்திய மக்கள் சிலர் இடையும் காணப்படுகின்றது. மலையாளநாட்டில் மருமக்கட்டாயம் என்னும் வழக்குண்டு. இதன்படி தந்தையின் சொத்துப் பிள்ளைகளைச் சேராது அவன் சகோதரியின் பிள்ளைகளை அடைகின்றது.2 திருவிதாங்கூர் அரசுரிமையும் பெண்வழியையே சேர்கின்றது. அரசனின் மருகனும் மருமகளுமே இளைய இராசர், இளைய இராணி என்னும் பட்டம் பெறுகின்றனர். அரசனின் பிள்ளைகளுக்கு இராச்சியத்தில் ஒருவகை



  1. The fatherhood is not taken into account when the sexual bond is a loose one, and under such circumstances the descent can only be reckoned in the mothers side.......The sense of fatherhood was of later development and that in premitive times the child was held to be allied by blood with the mother and not with the father - Premitive family - C. N. Starcke.

  2. மலையாளத்திலுள்ள நாயர் வகுப்பினரிடையில் காணப்படும் விவாகத்தொடர்பு சம்பந்தம் எனப்படும். பெண், தான் விரும்பிய எந்த நேரமும் இத்தொடர்பை வெட்டிவிடலாம். பின்பு அவள் இன்னொரு ஆடவனோடு சம்பந்தம் வைத்திருக்கலாம். அவனுக்கும் ஒரு வகைக்கட்டுப்பாடும் இல்லை. மலையாளத்தில் பெண் தனது தார்வாட்டில் இருக்கிறாள். அவள் இருக்கும் இடத்துக்குக் காதலன்செல்கின்றான். சிலவேளை காதலன் அவளிடம் செல்லாமலே நழுவிவிடுகிறான்; அல்லது அவள் அவனுக்கு அங்கு வருதல் கூடாதென அறிவிக்கின்றாள். இவ்வாறு சம்பந்தங் குலைந்துபோகின்றது. பிள்ளைகள் தாய்க்குச் சொந்தமானவை. தந்தைக்கு அவர்களைப் பராமரிக்க வேண்டிய கடமை இல்லை. அவனுக்குத் தனது குடும்பத்திலுள்ள சகோதரியின் பிள்ளைகளைப் பராமரிப்பதே கடமை-- Dravidian Elements in Indian Culture--G. Slater.


  இலங்கையிலும் சிங்கள மக்களிடையே இவ்வகை மணங்கள் பின்னி (Bini) மணம் என்னும் பெயருடன் நடைபெற்றன.