பக்கம் எண் :

தமிழ் இந்தியா125

களார்.1 மாபலி அசுரன் எனப்படுகின்றான். அசுரர்கள் வேதகாலத்துக்கு முன்பும் அதன் முற்பகுதியிலும் தேவர்கள் எனப்பட்டனர். பிற்காலத்தில் அவர்கள் இராக்கதர் அல்லது தேவர்களின் பகைவர் எனப்பட்டனர்.2 இராமாயணத்திற் கூறப்படும் வாலியும் சிவலிங்க வழிபாட்டினன். வாலியின் மரபும் பலியின் மரபும் ஒன்றோவென்பது ஆராயத்தக்கது.


இயல் 7
தமிழர் சமய வரலாறு

  இன்று இவ்வுலகில் பல்வேறு நிறத்தினரும் மொழியினருமாகிய மக்கள் ஆங்காங்கு வாழ்ந்து வருகின்றனர். மனிதவரலாற்று, மொழி வரலாற்று ஆராய்ச்சியாளர், இவர்கள் எல்லோரும் ஒரு மையத்தினின்றும் பிரிந்து சென்றவர்களேயென ஆராய்ந்து அறுதியிட்டுள்ளார்கள். இதனை ஒப்பவே மக்களின் சமயமும் ஒன்றாயிருந்து வளர்ச்சியுற்றுப் பின் பல்வேறு கிளைகளாகப் பிரிந்ததென்பது உய்த்தறியப்படும்.

அம்மை வழிபாடு

மக்களிடையே ஆதியிற்றோன்றியது தாய் வழிபாடு. வீரம் செல்வம் கல்வி போன்றவைகளுக்கெல்லாம் தலைமை பெற்றிருக்கும் கடவுளர்


  1. After the rise of Buddhism we find Balis flying sewards to "Little Java" or Baly and the Sunda group: and there they are still with that marked Dravidian characteristies-Rivers of Life Vol. 2, P. 486.

  2. Indeed the Asur or Asuras were gods or angels in high Asian or Prevedic and early vedic days; But in all sub Vedic literature they are A - suras or great giants - Ibid - P. 485.