கலிங்க நாட்டினின்றும் எழுநூறு தோழரோடு சென்ற விசய னென்னும் இராசகுமாரனே இலங்கையின் முதல் அரசன் எனப்படுகின்றான். கலிங்கர் தமிழர்களே என்பது எவருமறிந்த உண்மை. முன் எல்லம் என வழங்கிய இலங்கைத்தீவு சிங்க வமிசத்தவனாகிய கலிங்க அரசன் ஆண்டமையின் சிங்கலம் (சிங்களம்) எனப் பெயர் பெற்றது. இன்னும் சிங்கள மக்கள் தாம் விசயனதும் அவன் 700 தோழர்களதும் வழித் தோன்றல்கள் என நம்பி வருகின்றனர். சுமத்திரா, யாவா, இந்துச்சீனம், மலாயா, இலங்கை முதலிய நாடுகளிலெல்லாம் நாகவழிபாடு காணப்பட்டது. இது காரணமாக அந்நாடுகளின் மக்கள் நாகர் எனவும் அறியப்பட்டனர். யாவாத்தீவிலே அரசனும் அவனைச் சூழ்ந்து திரியும் பெருமக்களும் பொன் பாம்பு, பொன்யானை, பொன் மான், பொன்கோழி, அர்ச்சுனனின் அனுமக்கொடி என்பவைகளைக் கையில் வைத்திருந்தார்கள். இங்குக் கி. பி. 11-ம் நூற்றாண்டிற் றமிழிற் பொறிக்கப்பட்ட பட்டையமொன்று கண்டுபிடிக்கப் பட்டது.1 இதனால் ஒரு காலத்தில் தமிழ் யாவாத்தீவில் அரசினர் மொழியாக இருந்ததென நன்கு அறியலாம். அருச்சுனன் நாகர் குலக்கொடியாகிய யாவகமாதை மணந்து அரவானைப் பெற்றானென்று யாவக மக்கள் நம்புகின்றனர். இந்தியாவிலே புத்த சமயம் தலையெடுத்தபின் பலி மரபினர் கடல் வழியாகச் சென்று பாலித்தீவிலும் அயலேயுள்ள தீவுகளிலும் குடியேறினர். இத்தீவுகளில் வாழும் மக்கள் திராவிட மக்களை ஒத்த ஒழுக்கமுடையவர்களாகக் காணப்படுகின்றனர் என அகரம் என்பவர் குறிப்பிட்டுள் 1 . Tamilian Antiquary. | |
|
|