சிரியா மக்கள் வழிபட்ட அடாட் என்னும் சிவன் கடவுளின் திருவடிவம் ஒன்று அவ்விடத்திற் கண்டு பிடிக்கப்பட்ட வெண்கலத்தட்டு ஒன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ளது அக்கடவுள் ஒரு கையிற் இரண்டு அலகுள்ள கோடரியையும் (மழு) மற்றக் கையில் கீழும் மேலும் முத் தலைகளுடைய வேலையும் பிடித்திருக்கின்றார். மேற்கு ஆசிய மக்கள் முத்தலை வேல் அல்லது சூலத்தை இடியேறு என வழங்கினார்கள். "At his (The Jupiter of Syria) side hangs his sword in its scabbard his right hand brandishes a double axe; his left grasps a thunder-bolt consisting of six spirally-twisted lines, each of which is tipped with arrow head. The bull that supports the God has a rosette on the forehead between eyes--Zeus P. 619. இடபத்தின் நெற்றியில் பூமாலை கட்டப்பட்டுள்ளது. "... for in the Roman art he reappears under the title of Jupiter Dolichenus, wearing a phrygian cap, standing on a bull, and weilding a double axe in one hand and a thunderbolt on the other. In this form his worship was transported from the native home by soldiers and slaves till it had spread over a large part of the Roman empire, specially on the frontiers where it flourished in the camps of the legions"--The golden bough--a study of art and religion--Part IV, P. 134--J. G. Fracer. |