என்னும் பொருளையே கொடுக்கின்றன.1 எல் என்பது ஞாயிற்றையும் ஒளியையும் குறிக்கத் தமிழில் வழங்கிய சாலப் பழைய பெயர். " எல்லே இலக்கம்" என்பது தொல்காப்பியம். ஞாயிற்றுக் கடவுளை மக்கள் மலைமுகடு களிற் கண்டு வழிபட்டனர். ஆகவே உலகம் முழுமையிலும் இக்கடவுளின் இருப்பிடம் மலைமுகடு என்று கொள்ளப்பட்டது. இன்றும் சிவன் கைலாயமலையில் இருக்கிறார் எனப் பொதுமக்களும் பிறரும் நம்பி வருகின்றனர். மலைகள் இல்லாத நாடுகளில் ஞாயிற்றுக் கடவுள் செய்குன்றுகள் மீது வழிபடப்பட்டார். இவ்வகைச் செய்குன்றுகளி லொன்றே பேபெல் என்னும் கோபுரம்2 இவ்வகைச் செய்குன்றுகள் மேற்கு ஆசியா, 1. Of, Ra, II El, Helos, Bil, Baal, Al, Allah, Elohim, I cannot get any further information but that they were names given to the sun as the representative of the creator, who was spoken of reverentally as my lord. The lord & c. - The king & c, as this organ represented the creator and the sun all were typified under such characters as Bacchus, Dinoysus, Hercules, Hermes, Mahadeva, Siva, Osiris, Jupiter, Molech Baal, Assur and innumerable others - Ancient Faiths pp. 70. 476, Thomas Innman. Sans - Devas; Lat - Deus: Lith - Diewas; Old Irish - Dia; Old Norse - Tivar; Iran - Diaeva - Prehistoric Antiquities of Aryan peoples, p. 45, Dr. 6, Schrader. 2. பேலுஸ் அல்லது பேபெலின் கோபுரம்: சாலடியாவிலுள்ள பெரிய கோபுரம் பகற் கடவுளின் (Bel) ஆலயம். பகல் என்பது (Ba.el Ba-al or Pal) பிரகாலத்தில் பலுஸ் என வழங்கிற்று. இது 200 அடிச் சதுரமும் 480 அடி உயரமும் உடையதாயிருந்தது. இது வெயிலிற் காய்ந்த களிமண் கற்களாலும் செங்கல்லினாலும் கட்டப்பட்டது. இதன் படிக்கட்டுகள் செல்லச் செல்ல ஒடுங்கிச் செல்கின்றன. இதன் ஒவ்வொருபடியின் உயரமும் 60 அடி. இதன் உச்சியிலிருந்த மேடை ஆதிகால ஞாயிற்றுக் கோவில் எனத் தெரிகிறது. இதன் உயரம் 606 அடி என்று ஸ்ராபோ கூறியிருக்கின்றார். அவர் இதனை பெலுஸின் சமாதி எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் உச்சிக்கு ஏறிச் செல்வதற்குப் படிக்கட்டு உண்டு. இடையிடையே தங்கியிருந்து செல்வதற்கு இடங்கள் இருந்தன. ஒவ்வொரு படியும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியது. அடிப்படி சனிக்கு உரியது. இது கறுப்புநிறம் பூசப்பட்டிருந்தது. இரண்டாவது படி வியாழனுக்குரியது. இது தோடம்பழ நிறம் பூசப்பட்டிருந்தது. மூன்றாவது செவ்வாய்க்குரியது. இது சிவப்புநிறம் பூசப்பட்டிருந்தது. நான்காவது வெள்ளிக்கு; இதன் நிறம்மஞ்சள். ஆறாவது புதனுக்கு; இதன் நிறம் நீலம். ஏழாவது சந்திரனுக்கு; எட்டாவது சூரியனுடையது. தயதோரஸ் (Diodorus) என்பார் இதன் உச்சியிலுள்ள மேடையில் பெல்டிஸ், றீயா, பெல் (Beltis, Rhea, Bel) என்னும் கடவுளருக்குக் கோயில்கள் இருந்தனவென்று கூறியுள்ளார். பகல் (Bel) கடவுளுக்கு முன்னால் இரண்டு பொன் சிங்காசனங்கள் இருந்தன. பெல்ங்ஸ் என்பன வெள்ளியாற் செய்யப்பட்ட பெரிய பாம்புகள். இவை 30 தலன்ட் (Talent ஒரு தலன்ட் 200 தங்க நாணய நிறைவரையில்) நிறையுள்ள வெள்ளியாற் செய்யப்பட்டுள்ளன. இம் மூன்று உருவங்களின்முன் 40 x 15 அடி பொன் மேசையும் மேலுக்குமேல் 3 குடிக்கும் கிண்ணங்களுமிருந்தன. ஆண்டில் 1000 தலண்ட் நிறையுள்ள சாம்பிராணி இங்கு எரிக்கப்பட்டதெனக் கெர சோதசு (Heradotns) ஆசிரியர் கூறியுள்ளார். அவர் காலத்தில் இதன் அடியல் தங்கத்தாற் செய்த பகல் உருவமும், அதன்முன் தங்கமேசை ஒன்றும் இருந்தன. உச்சியிலுள்ள மேடையில் ஒரு மேசையும், அழகிய கட்டிலும் இருந்தன. பிள்ளை இல்லாத பெண்கள் பிள்ளைவரம் வேண்டி அங்குச் சென்றார்கள். --Rivors of life Part 2. |