ஆபிரிக்கா, அமெரிக்கா என்னும் நாடுகளிற் பல உள்ளன. உலக வியப்புக்கள் எனப்படும் எகிப்திய கூர்நுதிக் கோபுரங்களும் இவ்வகையினவே. இவை ஞாயிறு நடு உச்சிக்கு வரும் நாளில் அது எழும் திசையைப் பார்க்கும்படி கட்டப்பட்டுள்ளன.* தென்னிந்திய ஆலயங்களும் கிறித்தவர்களின் ஆலயங்களும் இவ்வாறே கட்டப்படுகின்றன. சலமனின் ஆலயமும் கிழக்குத் திக்கை நோக்கியே நின்றது. இலிங்க வழிபாட்டின் தொடக்கம் அடுத்தபடியில் மக்கள் செய்குன்றுகளுக்குப் பதில் அடி நிமிர்ந்து தலைகுவிந்த கற்களைச் சோலைகளிலும் வெளிகளிலும் நட்டு * The gates which lead to the sanctuary ought to be turned to the east in such a manner, that it often happens that the Sun, in rising on certain days in the year, throws its light on the lingam which is in the sanctuary - Dravidian architecture : G. Jouveal Dubreuil. |