பக்கம் எண் :

தமிழ் இந்தியா145

இலிங்கங்களை அவர்கள் சிபிறால்டரில் நாட்டியிருந்தமையின் அவ்விடம் இன்றும் " கெக்குவிசின் தூண்கள ்" என வழங்குகின்றது.

  மேற்கு ஆசிய நாடுகளிற்1 பேழைகள் (பெட்டி) வழி படப்பட்டன. இன்று இலங்கையிலுள்ள கதிர்காமம் என்னும் ஆலயத்தில் வழிபடப்படுவதும் பேழையே. மேற்கு ஆசிய நாட்டுப் பேழைகளுள் சிறிய இலிங்கம் வைக்கப் பட்டிருந்தது. நிலைபோல இரண்டு கற்களை நிறுத்தி மேல் ஒரு பாவு கல்லைவைத்து மூடிய கட்டிடங்களின்கீழ் (Dolmen) வைத்து இலிங்கங்கள் வணங்கப்பட்டன. இதிலிருந்தே பேழையில் இலிங்கத்தை வைத்து வழிபடும் முறை ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது. விவிலிய மறையில் பேழையில் வைக்கப்பட்ட சாட்சிப்பத்திரம் என்பது நம்மவர் " இயந்திரத் தகடு " என்பதை ஒத்ததே.


இலிங்க வழிபாட்டின் வளர்ச்சி

கடவுள் ஒருவரே உளர் என உணர்ந்த ***** அம்மை அப்பர்களின் அருட்குறிகளே இறைவனின் ஆண் தன்மை பெண் தன்மை என்பவைகளை உணர்த்தும் எனக் கொண்டனர். ஆண் தன்மை பெண் தன்மைகளை விளக்கும் அறிகுறியாக அவர்கள் ஆண்குறி பெண்குறி வடிவான அடையாளங்களையும் வைத்து வழிபடுவாராயினர். பின்பு இவ்விரண்டும் ஒன்றுசேர்க்கப்பட்டுக் கடவுள் ஆண் பெண் இயல்பினர் என்னும் இலப்பினும் வழிபடப்பட்டன. இவ்வடிவங்கள் எலோகிம் எனப்பட்டன, மொகெஞ்சொ-தரோ விலும் ஆண் கடவுளைக் குறிக்க ஆண்குறியும், பெண்


1. They (arks) seem to have developed from she old arrangement of the trilithon, enclosing a menhir or a cone. The deities seem to show that they belong to the people of Egypian influence in Phoenicia-Syrian Stone lore; - P. 100.
த. இ
.-II--10