பக்கம் எண் :

144தமிழ் இந்தியா

தொடர்பாகச் சிவலிங்கம் வழிபடப்பட்டது. கிரீசில் பக்கஸ் விழாவில் இலிங்கம் வீதிகள் வழியே உலாக் கொண்டு வரப்பட்டது. எகிப்தியரின் ஒஸ்றிஸ் என்னும் தெய்வம் பக்கஸ் என்பதன் இன்னொரு வேறுபாடே பக்கஸ் வழிபாடு இத்தாலியில் மிகவும் பரந்திருந்தது. பக்கஸ் கெபன (Hebin) அல்லது கம்பானியா (Campania) என்னும் பெயருடன் வழிபடப்பட்டார். கெபன் கெபி (Hebe- கௌரி) என்னும் தேவியுடன் வழிபடப்பட்டார். பக்கசுக்கு இடபமும் புலியும் மிகப் பிரியமானவை. அவர் 1புலித்தோலையுடுத்துக் கையில் திரிசூலத்தையும் வைத்திருந்தார். ஆதலால் கெபன் சிவன் என்றும், கெபி கௌரி என்றும் கூறலாம். பக்கஸ் கடவுளைப் பின்தொடர்ந்து இடபமும் புலியும் சென்றன. அவர் கையில் அருந்தும் மண்டையும் இருந்தது. சின்ன ஆசியாவில் இலிங்கக்கடவுள் கெமோஸ் (Chemos) மொலோச் (Moloch ) ெ மரதொக் (Merodock) ஆதோனியிஸ் (Adonais) சபாசியஸ் (Sabazius) பக்கஸ் அல்லது பாகேஒஸ் (Bagaios) என்னும் பெயர்களுடன் வழிபடப்பட்டார். வெஸ்தொப் (Westropp) என்பவர் அதோனிசஸ் என்பது அர்த்தநாரீசுவரர் என்று ஆராய்ந்து காட்டியுள்ளார். சின்னாட்களின்முன் எகிப்திலே துர்க்கம்மா என அடியில் எழுதிய ஒரு துர்க்கை உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது".

   றொடேசியா வில் (ஆபிரிக்கா) காணப்பட்ட இலிங்கங்களிலும் சிரியாவிற் காணப்பட்ட இலிங்கங்களிலும் பூமாலைகள் வெட்டப்பட்டிருந்தன. பொனீசிய மக்கள் தயர் நகரிலே பகலவன் ஆலயத்தில் மரகதத்தினாலும் பொன்னினாலும் செய்த இலிங்கங்களை வைத்து வழிபட்டார்கள். இவ்வகை


1. Bacchus wore tiger skin-Early faiths of Western Asia. P. 36.