பக்கம் எண் :

தமிழ் இந்தியா143

எடுத்தார்கள். கீரீசிலே விசா (Viza) என்னுமிடத்தில் சிவலிங்கத் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்தில் சிவலிங்கங்கள், பல கிறித்தவ ஆலயங்களுட் காணப்படுகின்றன. அவை சீல நாகிக் (Sheila-na-gig) என்று வழங்குகின்றன, இஃது ஒருபோது சிவலிங்கம் என்பதன் திரிபு ஆகலாம். பழம் பொருள் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்திலும் ஸ்கொத்திலாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் உரோமர் கோட்டைகளையும் மாளிகைக ளையும் கட்டி வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இவ் வணக்கத்தை இங்கிலாந்திலே பரப்பியிருத்தல்கூடும். செர்மனியிலும் பிரான்சியிலும் இவ் வணக்கம்மிக்கு வழங்கியிருந்ததற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. லிதுவேனிய மக்கள் (Lithuanians) 14-ம் நூற்றாண்டு வரையில் இவ் வணக்கத்தையே கைக்கொண்டிருந்து பின்பு கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள். திபெத்து, புத்தான் (Bhutan) என்னுமிடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகின்றது. சிந்தோயிசிம (Shintoism) என்னும் யப்பானிய மதத்தில் சிவலிங்கம் முதன்மையானது. அமெரிக்காவின் பல பகுதிகளில் சிறப்பாக மெச்சிக்கோ, பேரு, கைதிதிவு, (Hyti) க்ளில் சிவலிங்கம் வழிபடப்பட்டது. ஸ்பானியர் முதல் முதல் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஆலயங்களில் சிவலிங்கங்கள் வைத்து வழிபடப்பட்டதைக் கண்டார்கள். ஆபிரிக்காவில் தகோமி (Dahomi) என்னும் இடத்தில் இலிங்கம் லெங்பா (Lengba) என்னும் பெயருடன் வைத்து வழிபடப்பட்டது.

  இலிங்க வணக்கம் அசிசியாவிற்றோன்றி அயல் நாடுகளிற் பரவிற்று என்று சிலர் நினைக்கிறார்கள். கிரேக்க நாட்டில் பக்கஸ்
(Bacchus) தயோனிசஸ் (Dlonysus) வழிபாடுகள்