அமெரிக்காவின் சில பாகங்களில் இன்றும் இவ் வணக்கம் காணப்படுவதை ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். முக்கேர்சி என்பவர் இந்திய நாகரிகமும் அதன் பழமையும் என்னும் நூலிற் குறிப்பிட்டுளவற்றின் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம். 1"இந்திய மக்கள் சிவனின் அருட்குறியாகிய சிவலிங்க த்தைத் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர். இவ் வணக்கம் இந்தியாவுள் மாத்திரம் நிற்கவில்லை. இஃது உலகின் எல்லா நாடுகளிலும் ஒருகாற் பரவியிருந்ததென்பதை விளக்குவதற்கு வேண்டிய சான்றுகள் கிடைத்துள்ளன. சீனா, யப்பான், இந்துக்கடல், பசிபிக்கடற் றீவுகள் முதலிய இடங்களில் இவ்வழிபாடு முற்றாகத் தூர்ந்து விடவில்லை. ஆபிரிக்க அமெரிக்க2 மக்களிடையும் இஃது ஒருகாற்பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சீரிய, சின்ன ஆசிய, பபிலோனிய மக்களிடையும் இவ்வணக்கம் காணப்பட்ட தென்பதைக் கிறித்தவ மறை வாயிலாக அறிகின்றோம். சின்னாட்களின் முன் பபிலோன் நாட்டில் சிவலிங்கங்கள் பல அகழ்ந்து எடுக்கப்பட்டன. எகிப்தின் சில பகுதிகளில் ஹெம், ஹோறஸ், இஸ்றஸ், சராபிஸ் முதலிய பெயர்களால் இக்கடவுள் வணங்கப்பட்டது. சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வணங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்கங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இவ்வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இதனை ஓட்டுவதற்குக் கிறித்தவ குருமார் மிக ஊக்கம் 1. Indian Civilization and its Antiquiry: B. Mukerjee. 2. Ganesha Siva - Linga and Yama (the God of death and justice) and numerous serpent Gods were worshipped in some areas on the whole continent-Hindu America: P. 60, Chamanlal. |