பக்கம் எண் :

தமிழ் இந்தியா141

மேற்கு ஆசிய நாடுகளிலும் அருட்குறிகள் கருவாலி மரங்களின் கீழ் வைத்து வழிபடப்பட்டன;1 கிரேத்தா வில் யூகாவிப்ரஸ ் மரங்களின்கீழ் கற்றூண்கள் நிறுத்தி வழிபடப்பட்டன. எகிப்தியரும் கிரேக்கரும் ஆலினத்தைச் சேர்ந்த அத்தி மரத்தைப் பரிசுத்தமுடையதாகக்கொண்டு, அதனால் இலிங்கங்கள் செய்தனர்.
 

திங்கள் வழிபாடு


  ஞாயிற்று வழிபாட்டுக்குப்பின் திங்கள் வழிபாடு தோன்றிற்று. இந்திய நாட்டில் சந்திரன் ஆண் தெய்வமாகக் கொள்ளப்பட்டது. மேற்கு ஆசிய நாட்டவர் இதனைப் பெண் தெய்வமாகக் கொண்டனர். அன்னோர் மரத்தின் கீழ் நிறுத்தப்பட்ட கற்றூணை ஞாயிறாகவும் மரத்தைத்திங்களாகவும் கொள்வாராயினர். பின்பு திங்கட் கடவுள் ஞாயிற்றுக் கடவுளின் மனைவியாக்கப்பட்டது. மரங்களும் சோலைகளும் திங்கட்கடவுளாக வழிபடப்பட்டன. மரத்துக்குப் பதில் மரத்தூண்களும் நிறுத்தி வழிபடப்பட்டன. இவ்வாறு மேற்கு ஆசிய நாடுகளில் ஆண்கடவுள் பெண் கடவுளரைக் குறிக்க இலிங்கங்கள் நிறுத்தப்படலாயின. தமிழ் நாட்டில் இவ்வாறு நிகழவில்லை.


இலிங்க வணக்கம் உலகம் முழுமையும்
காணப்பட்டது

  எச். சி. வெல்ஸ் என்னும் ஆசிரியர் இலிங்கவழிபாடு இங்கிலாந்து முதல் கிழக்கே யப்பான் வரையும் காணப்பட்டதெனக் காட்டியுள்ளார்.


  1. Under the village tree or sacred oak, all very solemn vows must be made; here the young plighted their troths and elders ratified tribal and national offices and offered all the sacrifices of the gods. The sacred groves resounded with music chanting, wailings, with music litanies and prayers....and the wide spreading oak was thought a more devine than these like the ancient ark it was often the alter ego of the heaven father. The short studies in the science of comparative religions - p 376.