மிடத்தில் பேசப்பட்ட மொழி இக்காலத் திராவிட மொழியுடன் மிகவும் ஒத்துள்ளது." 1 " சோட்ஸ் பேண்வூட் என்பவர் அசீரிய கம்பளங்களும் இந்திய கம்பளங்களும் ஒரே வகையாயிருத்தலைக் காட்டி அவர்களின் செமத்தியருக்கும் ஆரியருக்கும் முற்பட்ட பொது உற்பத்தியைப்பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்." "தென்னிந்திய ஆலயங்களின் அமைப்பும் பழைய அசீரியரின் கட்டிட அமைப்பும் ஒரேவகையாகவுள்ளன. அசீரியரின் கட்டிடங்களிலும் தாமரை மொட்டும் மலரும் போன்ற மாதிரிகள் காணப்படுகின்றன. அசீரிய இந்திய சிற்பக் கலைகளுக்கிடையில் அதிக ஒற்றுமை காணப்படுகின்றது. இவ்விரு மக்களும் ஒரு பொதுக்கூட்டத்தினின்றும் பிரிந்தவர்களாதலின் இவ்வொற்றுமை காணப்படலாம்." 2 "தென்னிந்திய ஆலயங்களும் சீனா யப்பான் (Torii) ஆலயங்களும் ஒரே அடிப்படையின் தோற்றங்களாகும். திருத்தமுறாத பியூசியர் (Figians) எகிப்திய இந்திய ஆலயங்களின் மாதிரியைச் சரியாகப் பின்பற்றமாட்டாமையால் கோபுரங்களின்றிக் கோயில்களை அமைத்திருக்கிறார்கள்." "கீரேத்தா (Crete) பபிலோன் கிழக்கிந்திய தீவுகளில் 3 சங்கு வாத்தியங்களும் முத்து அலங்காரமும் கவனிக்கத் 1. Hindu civilization p. 38. R. K. Mukerjee. 2. The gate ways of India p. 53. Colonel Sir Thomas Holdich. 3. The couch shell used in Minoan cult for summoning the dovinity. Conch shells are themselves of frequent occurance in Minoan shrines - The Palace of Mines at Knos-os-vol. IV; p. 344. |