தக்கன. பொனீசியர் இவ் வழக்கத்தை மைசீனியரிட மிருந்து பெற்றிருக்கலாம். பிற்காலப் பிராமண புத்த வழக்கங்களுக்கு அடிப்படையாயிருந்த திராவிட வழக்கங்களுள் இது நன்றாக வேரூன்றி யிருந்தது. தற்காலத்தில் இப் பழக்க வழக்கங்களைச் சிலர் பர்மா இந்து சீனா, சீனாயப்பான் வரையும் கொண்டு சென்றனர். பின்பு இவை பசிபிக்கிய தீவுகளுக்குக் கொண்டு போகப்பட்டன. கடைசியில் இவை அமெரிக்கக் கரைகளை அடைந்தன." 1 "சிந்து கிழக்குத் தீவுகளின் எழுத்துக்கள் ஒன்று என்று கூறுவதைப்பற்றி ஐயப்பாடு இல்லை. பழைய இந்திய எழுத்து எவ்வாறு பசிபிக்குத் தீவுகளுக்குச்சென்றது என்பதை ஒருவரும் சொல்லமுடியாது. மரக் கட்டைகளில் எழுதப்பட்ட கிழக்குத்தீவு எழுத்துக்களின் காலம் அறியப்படவில்லை. அவர்களின் எழுத்து முழுதும் மறக்கப்பட்டது. இதே எழுத்துக்கள் இந்திய முத்திரைகளிற் காணப்படுவன போலப் பழைய சுமேரியா, சூசா, தைகிரசுக்குத் தெற்கே உள்ள கரைத் தீவுகளிலும் காணப்பட்டன. வரலாறு அயிப்படாத ஒரு மக்களின் நாகரிகம் இங்குக் காணப்படுகின்றது." "சுமேரியர், இந்திய எழுத்துக்களைச் சுமேரியாவுக்குக் கொண்டு சென்ற இந்திய வியாபாரிகளிடமிருந்து அவைகளை அறிந்திருக்கலாம். அப் பழைய எழுத்துக் குறிகளின் பகுதிகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவைகளுட் சில வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட சிந்து எழுத்துக்களைப் போல எனக்குத் தோற்றுகின்றன. சிந்து மொழி பேசப் படுகின்றபோதும் எழுதப்படுகின்றபோதும் அதனை முழுதும் அறிந்தவர்கள் சுமேரியர்களேயாவர்." 1. The Ancient Egyption Culture pp. 22, 23 G. Elliot Smith. |