பக்கம் எண் :

294தமிழ் இந்தியா

செல்வாக்குடைய தலைவர்கள் பலரும் விளங்கினார்கள். கடற்கரைப் பகுதிகள் மூவேந்தருக்குரியவா யிருந்தன. நடுப்பகுதிகளும் மலைகளும் குறுநில மன்னர் வசம் இருந்தன. கிழக்குக் கரையில் கிருஷ்ணாநதிமுதல் தெற்கில் இராமநாதபுரப் பகுதியிலுள்ள தொண்டிவரையில் சோழ இராச்சியம் இருந்தது. இவ்விராச்சியத்தின் நடுவே காஞ்சிக்கு வடக்கிலுள்ள திருக்கோவலூரைச் சூழ்ந்த மலைநாடு மலையமான் என்னும் சிற்றரசனின் கீழ் இருந்தது. சோழ நாட்டுக்குத் தெற்கில் பாண்டிய இராச்சியம் இருந்தது. இது கிழக்குக் கடற்கரையிலிருந்து மேற்குக் கடற்கரை வரையும் அகன்றிருந்தது. மதுரை, திருநெல்வேலி, திரு விதாங்கூர், கோயமுத்தூரின் பகுதி, கொச்சி என்பன இதில் அடங்கும். இவ்விராச்சியத்துக் குட்பட்டிருந்த பொதியமலையை ஆயும் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள கொற்கைத் துறைமுகத்தைச் சூழ்ந்த இடங்களை எவ்வி யும் ஆண்டனர். பழனிமலையையும் அதைச்சூழ்ந்த நாடுகளையும் பேகன் ஆண்டான். இவனுடைய நாடுகளுக்கு வடக்கே மேற்குத் தொடர்ச்சிமலை ஓரமாகச் சேரநாடு இருந்தது. இது பாலைக்காட்டு வெளி (Palghat gap) வழியாகக் கோயமுத்தூர்வரையுஞ் சென்றது. இதற்குச் சரிநேரே (Parallel) தென் மைசூரில் பல சிற்றரசர்களின் நாடுகள் இருந்தன. அவர்களில் அரயம் நாட்டை இருங்கோவேளும் , பறம்பு மலையைப் பாரி யும், தகடூரை (தருமபுரி) அதியமானும், கொல்லிமலையை ஓரி யும் ஆண்டனர். இருங்கோ வேளின் நாட்டுக்கு வடக்கே கங்கர் நாடுகளும், தெற்கில் கொங்கு நாடும ் இருந்தன. தமிழ்நாட்டின் வடக்கே (மேற்குக் கரையில்) உள்ள துளுநாடு நன்னன் ஆணைக்குட் பட்டிருந்தது; கிழக்கில் புல்லியின் நாடும், வடக்கில் வடுகர் நாடும் இருந்தன.