பக்கம் எண் :

தமிழ் இந்தியா293

தெக்கணமும் அதிற்சிறந்த திரவிடநற் றிடுநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க விருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே.

--மனோன்மணீயம்.


1முன்னிருந்த பாலி மொழியுங்கீர் வாணமும்
துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு--முன்னரே
பண்டைக்கா லத்தே பரவைகொண்ட முன்னூழி
மண்டலத்தி லேபேர் வளநாட்டின்--மண்டுநீர்ப்
பேராற் றருகிற் பிறங்கு மணிமலையிற்
சீராற்றுஞ் செங்கோற் றிறற்செங்கோல்--நேராற்றும்
பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்தப்
பாரரசு செய்ததமிழ்ப் பைந் தேவி.

--தமிழ்விடு தூது.


பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற
பச்சைப் பசுங் கொண்டலே.

--மீ. பிள்ளைத்தமிழ்


சங்ககாலத்துத் தமிழகம்

  கிருஷ்ணா நதிக்குக்கீழ் உள்ள நாடுகள் மூன்று இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவற்றுள் மூவேந்தருடையவும் குறுநிலமன்னர் எழுவருடையவும் இராச்சியங்கள் அடங்கும். இவர்களை அன்றிச் சிறிய


1. மாகறல் கார்த்திகேய முதலியார் மொழி நூலிற் கண்டது.